indenture

ஒப்பந்தம், தொழில் முறைக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம்

தமிழ் விளக்கம்

ஒரு நபர், இன்னொரு நபரிடம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஊழியம் / சேவகம் செய்வதாக ஒப்பந்தம் செய்துகொள்வது. அதாவது ஒப்பந்தக் கூலியாக / கொத்தடிமையாக இருக்க ஒப்புக்கொள்வது. காலனித்துவ அமெரிக்காவில் கொத்தடிமை முறை மிகப் பரவலாக இருந்தது. இந்தியாவிலிருந்தும் ஒப்பந்தக் கூலிகளாக தென்அமெரிக்கா, மொரீஷியஸ் போன்ற பல நாடுகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனுப்பட்டனர். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து அடிமை முறையையும், ஒப்பந்தக் கூலி முறையையும் ஒழித்துக் கட்டுவதற்குக் குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரச்சாரம் செய்யப்பட்டது. இவர் 1787 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட 'அடிமை ஒழிப்புக் குழுவின்' முதல் தலைவர். பிரெஞ்சுப் புரட்சியின் போது 'முதல் குடியரசு' பிரகடனம் செய்யப்பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையைத் தடைசெய்து ஒழித்தன. தற்போது ஓரிரண்டு நாடுகளைத் தவிர, எல்லா நாடுகளிலும் அடிமைமுறை வெளிப்படையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வறுமையின் காரணமாக, அரசியல் சூழல் காரணமாக, புலம் பெயர வேண்டிய காரணமாக, உரிய ஆவனங்கள் இல்லாமல் பிறநாட்டில் தங்கியிருப்போரின் சூழ்நிலையைப் பயன்படுத்தி, ஒப்பந்தக்கூலி முறை மறைமுகமாக தொடரவே செய்கின்றது.

English

An obligation in which one person is required to serve or work for another for a specified length of time. In colonial America, indentured servitude was a common practice by which immigrants would receive transportation to their new homes in exchange for working for several years. Later, the practice was frequently applied to parentless children who were compelled to become indentured to a custodian. From this practice and that of apprenticing originated many of the principles of foster care. Indenture is still practiced, illegally or covertly, by some people who exploit the circumstances of an immigrant or undocumented alien.