independent adoptions

சுதந்திரமாகத் தத்தெடுத்தல் / சுவீகாரம் எடுத்தல்

தமிழ் விளக்கம்

தத்தெடுத்தல் என்பது இரத்த உறவு இல்லாத குழந்தைக்குப் பெற்றோராக (வளர்ப்புத் தந்தை அல்லது தாய்) செயற்படல் ஆகும். இவ்வாறு செய்வதால், தத்தெடுக்கப்படும் குழந்தைக்கு முழுப் பொறுப்பாளி ஆவதுடன், அப்பிள்ளையின் உண்மையான பெற்றோருக்கு அப்பிள்ளை மேலிருக்கும் உரிமையும் இல்லாமல் செய்யப்படுகிறது. தத்தெடுத்தல் சட்டம் மூலம் செய்யப்படுவதே, பிற்காலத்தில் உரிமையைத் தக்கவைத்துக்கொள்ளவும், வேறு சிக்கல்களிலிருந்து விடுபடவும் வழியாகும். தத்தெடுப்பில் பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகின்றன. 1. சுதந்திரமாகச் சுவீகாரம் எடுத்துக்கொள்ளுதல் என்பது, தத்தெடுப்பிற்கென்று சட்டபூர்வமாக ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்களைச் சார்ந்திராமல், அதே நேரத்தில் சட்டவிரோதமில்லாமல், குழந்தையைப் பெற்ற பெற்றோரின் (பிறப்பித்த பெற்றோர் Birth Parents) ஒப்புதலுடன் குழந்தையைத் தத்தெடுப்பது. 2. சிலநேரங்களில் மாற்றாந் தாயோ அல்லது மாற்றாந் தந்தையோ குழந்தையைத் தனதாக ஏற்றுக்கொண்டு வளர்ப்பது. 3. ஒருவருக்கொருவர் அறிமுகமாயிராத பிறப்பித்த பெற்றோருக்கும், தத்தெடுக்க விரும்பும் தம்பதியினருக்கும் இடையே தனிநபர்களோ நிறுவனங்களோ இடைமுகமாகச் செயல்பட்டு தத்தெடுக்க உதவுவது. 4. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக் குழந்தையை தத்தெடுக்க விரும்பினால், அந்த நாட்டின் சட்ட சாம்பிராதயங்களுக்கு உட்பட்டு, அரசாலோ அல்லது அரசு அங்கீகரித்த நிறுவனங்களாலோ தத்தெடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 5. இலாப நோக்குடன் செயல்படும் தத்தெடுப்பில், குழந்தைகளைத் திருடியோ, பிறப்பித்த பெற்றோருக்கு ஆசைகாட்டியோ, ஏமாற்றியோ, குழந்தையைச் சட்டவிரோதமாகக் கடத்தியோ தத்துக் கொடுப்பதுண்டு. கள்ளத்தனமாக செய்யப்படும் இத்ததெடுப்பு சட்ட விரோதமானது.

English

The process of adoption outside of established social agencies. There are many variations in this process. In family adoptions, the birth parents place the child with a relative. In stepparent adoptions, the most common type of independent adoption, a stepparent adopts a spouse's child. In nonprofit intermediate arrangements, an individual or organization acts as a go-between for birth parents and adoptive parents who do not know each other. In intercountry adoption, a child from one nation is adopted by parents in another, with arrangements monitored with varying degrees of formality by authorities and individuals in the child's original country. A final category, that of for-profit intermediate arrangements, is controversial. For-profit arrangement has been called black-market adoption. However, because the process is not "adoption" unless it is legal, it is a contradiction of terms. Thus, some child welfare specialists have used the term gray-market adoption.