independent living centers

சுதந்திரமான / தற்சார்பு / சுயாதீன வாழ்க்கை மையங்கள்

தமிழ் விளக்கம்

சுதந்திரமான வாழ்க்கை மையங்கள் என்பது, வசதிகள், நிறுவனங்கள், அவ்வாறு வாழ உதவும் சமுதாயங்கள் என்று பலநிலைகளைக் குறிக்கும் சொல். இது இயலாமையால் (ஆற்றலின்மையால், ஊனத்தால்) பாதிக்கப்பட்டவர்களுக்குச் சமூக மற்றும் மருத்துவ சேவைகளை வழங்க பல சமுதாயங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் வசதிகள் / மையங்களைக் குறிக்கும். இந்த சுயாதீன மையங்களில் இயலாமையால் பாதிக்கப்பட்டவர்களே பெரும்பாலும் பணியிலமர்த்தப்பட்டு, அங்கு வாழ்பவர்களுக்கு சாமானர்களின் ஆலோசனையும் (peer counseling), சட்ட உதவியும், நிதியைக் கையாள உதவியும், வேலைவாய்ப்பு உதவியும், மன நல ஆலோசனையும், போக்குவரத்து உதவியும், சக்கர நாற்காலி போன்றவற்றைப் பழுது பார்க்கவும் மற்றும் தேவையான தொடர்புகள் / பரிந்துரைகளைச் செய்யவுமான ஏற்பாடுகள் இருக்கும். சுயாதீன வாழ்க்கை மையங்களில் உடனுறையும் சமானர்களால் தேவையானவர்களுக்குத் தகவலும் தந்துதவப்படும்.

English

Facilities and programs located in more than 200 communities in the United States and other nations to provide social and health care services for people with disabilities. The centers for independent living are staffed largely by people who themselves have disabilities and offer such services as peer counseling, legal assistance, financial guidance, job placement, mental health counseling, transportation, wheelchair repair, and referrals. The programs provide a peer support system and information for families and professionals.