independent practice associations (IPAs)

தன்னிச்சையாகத் தொழில் செய்பவர்களின் கூட்டமைப்பு, நிறுவனச் சார்பற்ற தன்னிச்சையான தொழில் செய்பவர்களின் கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

தன் சேவையை வேண்டிவரும் நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ சேவை செய்யும் அனைத்து வகையான தொழிலினருக்குமான, குறிப்பாக மருத்துவத் தொழிலினருக்குமான கூட்டமைப்பு. தன்னிச்சையாகத் தொழில் செய்பவர்களுக்கான கூட்டமைப்பு, நிலையான வருடாந்திர கட்டணத்தைச் சந்தாவாகப் பெற்றுக்கொண்டு, உறுப்பினர்களுக்கு விரிவான மருத்துவ சேவைகளை வழங்கும். இது, மருத்துவப் பராமரிப்பு அமைப்புகளின் (Health maintenance organization (HMO) போட்டியை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு.

English

A consortium of individual health care providers, mostly in private practice, that represents all specialties and that provides for the health care needs of groups of people who contract for the service in advance. IPAs in some regions are also known as "individual practice associations." IPAs developed mostly as a competitive response to the proliferation of the health maintenance organization (HMO). See also preferred provider organizations (PPOs) and managed health care program.