Index of Social Health

சமூகச் சுகாதாரக் குறியீட்டெண், பொதுநலக் குறியீட்டெண்

தமிழ் விளக்கம்

பதினாறு காரணிகளை மையப்படுத்தி அமெரிக்க அரசு ஆண்டு தோறும் தயாரித்து வெளியிடும் சமூகச் சுகாதாரக் குறியீட்டெண் அல்லது பொதுநலக் குறியீட்டெண் போன்று இப்பொழுது பல நாடுகளும், அந்தக் காரணிகளை உபயோகப்படுத்தியோ, சிலவற்றை சேர்த்தோ அல்லது விலக்கியோ பொதுநலக் குறியீட்டெண்களைத் தயாரிக்கின்றது. சமூக ஆரோக்கியக் குறியீட்டெண்களைத் தயாரிக்க கீழ்கண்ட காரணிகள் உபயோகப்படுத்தப்படுகிறது. 1.சிசு மரண விகிதம், 2. பள்ளி இடைநிற்றல் 3. போதைப் பழக்கம் 4. வேலைவாய்ப்பு விகிதம் 5. சராசரி மாதாந்திர வருவாய், 6. ஆதரவற்ற, வறுமை வயப்பட்ட முதியவர்கள், 7. ஏழை பணக்காரர் இடையே ஏற்றத்தாழ்வு 8. குழந்தைகள் மீதான வன்முறை, 9. சொந்தமாகச் செய்யும் மருத்துவச் செலவுகள், 10. வேலையின்மை 11. வீடற்ற நிலை, 12. பொது சுகாதாரம் 13. குற்ற நிகழ்வுகள், 14. கல்வி மற்றும் பிற காரணிகள் சமூகச்ச சுகாதாரக் குறியீட்டெண் தயாரிக்கப் பயன்படுகிறது.

English

An annual publication based on U.S. government statistics to report on the incidence of 16 factors pertaining to social well-being. The 16 factors include infant mortality, high school dropout rate, drug abuse, number of jobs held, Average Income Monthly Earnings (AIME), impoverished elderly population, the gap between rich and poor, rate of child abuse, out-of-pocket health care costs, unemployment, housing, health factors, crime, education, and other social indicators. The Index quantifies each of these factors to reach a single figure, which may be compared with previous years, thus showing if the nation is progressing. The publication was first issued in 1987 to replace Social Indicators, which ceased publication in 1981.