indexing

அட்டவணைப்படுத்தல், குறியீடு செய்தல், சுட்டுவரிசையாக்கம், அடுக்குக்குறி, வரிசைப்பட்டியல், அகரவரிசைத் தொகுத்தல், குறியீடு

தமிழ் விளக்கம்

வரிசைப்பட்டியல் அல்லது குறியீட்டெண் மூலமாக சமூக நிகழ்வுகளை, நிலைகளை விளக்குவதும், கையாள்வதும் உலக அளவில் சமூகக் கொள்கை வகுப்பதற்கு மிகப் பயனுள்ள உத்தியாகக் கையாளப்படுகிறது. இந்த குறியீட்டெண்கள் ஒரு நாட்டின் நிலையை பிற நாடுகளுடன் ஒப்பிடவும், உள்நாட்டிலே பிராந்தியங்களுக்கிடையே உள்ள வளர்ச்சி மற்றும் பின்னடைவை அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது. மனித வளர்ச்சிக் குறியீட்டெண் (Human Development Index), சுகாதார வளர்ச்சிக் குறியீட்டெண் (health index), பாலின சமத்துவக் குறியீட்டெண் (gender equality index), வறுமைக் குறியீட்டெண் (poverty index), லஞ்சக் குறியீட்டெண் (corruption index), மனித உரிமைக் குறியீட்டெண் (human rights index) போன்ற பல குறியீடுகள் ஒரு நாடும், சமூகமும் எதற்கு முன்னுரிமை தரவேண்டுமென தீர்மானிக்கப் பெருமளவு உதவியிருக்கின்றது. 2. பணவீக்கம் மற்றும் விலைவாசிக் குறியீட்டெண்ணுக்கு ஏற்றவாறு ஊதிய விகிதங்கள், சமூக நலத் திட்ட, சமூகப்பாதுகாப்பு திட்டப்பயன்கள் தன்னிச்சையாக சரி செய்யப்படுவதற்கும் இது உதவுகிறது.

English

The automatic adjustments of salaries, welfare payments, social security, and other benefits based on inflation rates and the changing cost of living.