Indian Child Welfare Act (ICWA) of 1978
இந்திய குழந்தைகள் நலச் சட்டம் 1978
தமிழ் விளக்கம்
இந்திய குழந்தைகள் நலச் சட்டம், அமெரிக்க இந்தியக் குழந்தைகளை அவர்கள் குடும்பத்திலிருந்தும், பூர்வீகக் கலாச்சாரத்திலிருந்தும் பிரித்து, இந்தியரல்லாத குடும்பங்களிலும், இந்தியத் தன்மையற்ற காப்பகங்களிலும் வளர்த்த வரலாற்றுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட சட்டம். அமெரிக்க இந்தியக் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கவும், அமெரிக்க இந்தியக் குடும்பங்களின் ஸ்திரத்தன்மையை பேணுதலும் இச்சட்டத்தின் குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டது. அமெரிக்க இந்தியக் குடும்பங்கள் மற்றும் அவர்களின் கலாச்சார ஸ்திரத்தன்மையைக் காக்க இந்த சட்டம் மூன்று முக்கிய நிபந்தனைகளை விதித்தது. 1. எந்தச் சூழ்நிலையில் ஒரு அமெரிக்க இந்தியக் குழந்தை அதன் பிறப்புக் குடும்பத்திலிருந்து பிரிக்கப்படலாம் என்பதற்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. 2. அமெரிக்க இந்தியக் குழந்தைகளை ஏற்கும் காப்பகங்கள் அமெரிக்க இந்தியக் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும் 3. அமெரிக்க இந்தியக் குடும்பங்களின் ஸ்திரத்தன்மையைப் பேண பிரத்தியேகக் குடும்ப சேவைத் திட்டங்களை அமுல்படுத்த அரசை வலியுறுத்தியது.
English
Federal legislation (P.L. 95-687) to promote the best interests of Native American children and the stability and security of Native American tribes and families. The act gives tribes exclusive jurisdiction over reservation Indian children. Other key provisions include the right of the child's parents or the tribe to be notified of and to intervene in child custody proceedings, higher standards of proof in termination of parental rights proceedings, and certain preferences when a Native American child is placed in foster care.