Indian Constitution - Preamble

இந்திய அரசியலமைப்பு சட்டம் முன்னுரை

தமிழ் விளக்கம்

முகப்புரை என்பது இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும்.முதன்முதலில் முகப்புரையை அரசியலமைப்பில் வழங்கிய நாடு அமெரிக்கா அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் பல நாடுகள். பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களால் டிசம்பர் 13. 1946 ல் இந்திய அரசியல் நிர்ணய சபையின் குறிக்கோள்கள் பற்றிய தீர்மானம் முன்மொழியப்பட்டு ஜனவரி 22 1947 ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்பு இது இந்திய அரசியலமைப்பின் முகப்புரையாக மாற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்புக்கு முகப்புரை வேண்டும் என்று கூறியவர் ஜவஹர்லால் நேரு. மக்களே அதிகாரத்தின் தோற்றுவாய் என்று இந்திய அரசியலமைப்பின் முகப்புரை கூறுகிறது.
இந்தியா ஒரு இறையாண்மை உடைய சமதர்ம மதச்சார்பற்ற மக்களாட்சி மற்றும் குடியரசு நாடாக உள்ளது. நீதி சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவை நமது நோக்கங்கள் எனவும் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை கூறுகிறது. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை இந்திய அரசியலமைப்பின் ஆன்மா என்று கூறியவர் தாகூர்தாஸ் பார்கவ். அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போதே முகவுரையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பின் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் இதில் குறிக்கப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26 1949. முகவுரையில் இதுவரை ஒரே ஒருமுறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது 42வது சட்ட திருத்தம் (1976) மூலம் சமதர்ம்ம் மதச்சார்பற்ற என்ற வார்த்தைகளும் ஒருமைப்பாடு என்ற வார்த்தைகளும் சேர்க்கப்பட்டது.இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் உள்ள சமத்துவம் சுதந்திரம் போன்ற வார்த்தைகள் பிரெஞ்சு புரட்சியின் வழியாக சேர்க்கப்பட்டது. அரசியலமைப்பின்படி இந்தியா ஒரு இறையாண்மை பெற்ற மக்களாட்சிக் குடியரசு எனவும் சமதர்ம நெறி சார்ந்த மதச்சார்பற்ற குடியரசு எனவும் கூறுகிறது. கேசவானந்த பாரதி கேரளா அரசை எதிர்த்து தொடங்கியது வழக்கில் முன்னுரை அரசியல் அமைப்பின் ஒரு பகுதியே என்று உச்சநீதிமன்றம் கூறியது.

English

The introduction to the Indian Constitution is the Preamble. The 'Preamble' of the Constitution of India is a brief introductory statement that sets out the guiding purpose and principles of the document, and it indicates the source from which the document which derives its authority, meaning, the people.The hopes and aspiration of the people as well as the ideals before our nation are described in the preamble in clear cut words. It may be considered as the soul of Constitution.
The Preamble text is
“WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:
JUSTICE, social, economic and political; LIBERTY of thought, expression, belief, faith and worship;
EQUALITY of status and of opportunity; and to promote among them all FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation; IN OUR CONSTITUENT ASSEMBLY this twenty-sixth day of November, 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.”