indigenous people

ஒரு நிலப்பரப்பை (நாடு / பூகோளப் பகுதி) தங்களுடைய ஜென்ம தேசமாகக் கொண்டிருப்பவர்கள்

தமிழ் விளக்கம்

இவர்களைப் பூர்வகுடியினர், சுதேசவருக்கதிதினர், சுதேசச்சாதியினர், தொன்முதற்குடியினர், பழங்குடி மக்கள் போன்ற பல பெயர்களால் அழைக்கின்றனர். பூர்வ குடியினர் என்றழைக்கப்படும் இவர்கள் எல்லாநாடுகளிலும் இருக்கின்றார்கள் அமெரிக்காவில் இவர்கள் பூர்வகுடியினர் (natives) என்றும், கனடாவில் இவர்களை தொல்குடியினர் (first nations people) என்றும், ஆஸ்திரேலியாவில் தொன் முதுவர் என்றும், அங்கு வந்து குடியேறி அரசியல் ஆதிக்கம் பெற்ற மேலாத்திக்கத்தினர் இவர்களைப் பல பெயர்களில் அடையாளப்படுத்துகின்றனர், இவர்கள் பெரும்பாலும் தங்களின் பூர்வீக வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டாலும், தங்களுடைய இன அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதோடு, அதைத் தங்களின் சந்ததியினருக்குச் சொல்லித் தருவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபை ஆகஸ்ட் 9ஆம் தேதியை உலகில் உள்ள சுதேச மக்களின் சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. உலகில் மொத்த ஜனத்தொகையில் 6 சதவீதமான மக்கள் சுதேச, ஆதிகுடிகளாக வாழ்ந்து வருகின்றனர். 72 நாடுகளில் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

English

Descendants of earlier or original inhabitants of a nation or region, for example, Native Americans in the United States, First Nations Peoples in Canada, Aborigines in Australia, Sami (Lapps) in Scandinavia, and Rom (Gypsies) in Eurasia. The term is mostly used by the currently dominant people or government of the nation or region in referring to those who were there first or to peoples forced into migration or isolation from the original homeland. Indigenous peoples have a historical continuity with their pre-invasion or pre-colonial societies that developed on their territories and seek to maintain their ethnic identities and transmit this to future generations.