indigenous worker

உள்ளூர் பணியாளர்

தமிழ் விளக்கம்

ஒரு சமுதாயத்தில், சிறப்புத் தொழிலினருக்கோ (professional) அல்லது ஒரு செயல் திட்டத்திற்கோ (project) அதன் நோக்கங்களை அடைய உதவும் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் பணியாளராகவோ அல்லது தன்னார்வலராகவோ இருக்கலாம். இவர் தான் வாழும் சமுதாயத்தின் பிரச்சனைகளை இனங்கண்டு, அதை நிவர்த்தி செய்ய வழங்கப்படும் சேவைகளோடும், அச்சேவைகளை வழங்கும் நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களோடும் மக்களை இணைத்து வைப்பவர். இவர் ஊக்குனர், களப்பணியாளர், சமுதாய அமைப்பாளர், மக்கட்பணியாளர் என்று பல பெயர்களில் அழைக்கப்படுவார்.

English

A member of a community who becomes active in helping professionals achieve some service goals for that community. Indigenous workers may be paid employees or volunteers, and their roles often include identifying sources of problems, educating residents as to the services being offered, linking clients with professional service providers, and counseling.