indirect practice
மறைமுகப் பணி, மறைமுக நடைமுறை, சேவைகளுக்கான ஏற்பாட்டியல்
தமிழ் விளக்கம்
வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு இல்லாமல், நேரடிச் சேவையில் ஈடுபடாமல், அப்படிச் செய்யப்படும் சேவைகளுக்கு நிர்வாக உதவி அளித்தல், வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் அதற்கான சேவைகள் பற்றிய ஆய்வு, கொள்கை வகுத்தல் / வடிவமைப்பு, கல்வி மற்றும் பயிற்சி போன்ற முஸ்தீபு (ஏற்பாட்டியல்) செயல்களில் ஈடுபடல். இது சேவைகளைத் திறனுடனும், சிக்கனமாகவும் செய்ய உதவியாயிருத்தலால் மற்ற நேரடியான சமூகப்பணி முறைகளுக்கு (direct practice) இணையானது என்று கருதப்படுகிறது.
English
Those professional social work activities, such as administration, research, policy development, and education, that do not involve immediate or personal contact with the clients being served. Indirect practice makes direct practice possible and more efficient; as such, it is considered essential and of equal importance to the mission of the profession.