indirect treatment

மறைமுகச் சிகிச்சை

தமிழ் விளக்கம்

சமூகத் தனியாளர் பணியில், ஒரு வாடிக்கையாளருக்கு உதவும் பொருட்டு அவரின் சூழலைச் (குடும்பம், நண்பர்கள், பணியிடங்கள்) சரிசெய்ய எடுக்கப்படும் முயற்சிகள். வாடிக்கையாளருக்காக மத்தியஸ்தம் செய்வது (mediation), வாடிக்கையாளரின் நிலையைப் பற்றி வாடிக்கையாளருக்கும் மற்றவருக்கும் புரிய வைப்பது (edcation), அவருக்காகப் பரிந்து வாதிடுவது (advocacy), அவருக்கான பிற உதவியாதரங்களைக் கண்டடைய உதவுவது போன்ற செயல்கள் மறைமுக சிகிச்சை/ சேவை என்றழைக்கப்படுகிறது. மறைமுகச் சிகிச்சைக்கும், நேரடியான சிகிச்சை / சேவைக்குத் தேவைப்படும் திறன்களனைத்தும் தேவைப்படுகின்றன.

English

In social casework, the term used by some to describe work in the environment on behalf of the client. Such work includes mediation, education, advocacy, and locating resources. These activities are said to require virtually the same skills and techniques as are needed in direct treatment.