individual development account (IDA)
தனிநபர் மேம்பாட்டிற்கான (வங்கி) கணக்கு
தமிழ் விளக்கம்
குறைந்த வருவாயுள்ள குடும்பங்கள் தங்கள் ஓய்வு காலத்தில் பயன்படவும், வீடு போன்ற சொத்துக்களை உருவாக்கிக் கொள்ளவும், குழந்தைகளின் கல்லூரிப் படிப்பிற்கு உதவவும், சிறுவணிக மேம்பாட்டு முயற்சிகளுக்கும் வங்கிக் கணக்கை தொடங்கி சேமிக்கத் தூண்டி, சேமிப்பிற்கு இணையான மானியத்தை (அமெரிக்க) மைய, மாநில அரசுகளோ, பணியிலமர்த்தியுள்ள நிறுவனங்களோ வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட சுயமுன்னேற்ற திட்டம். இது அமெரிக்க அரசின் 1996 ஆண்டு சுய பொறுப்பெடுத்தல் மற்றும் வேலை வாய்ப்பு ஒத்திசைவு சட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதம மந்திரி நரேந்திரா மோடியின் ஜன் தான் வங்கிக்கணக்கை இதனுடன் பொருத்திப்பார்க்கவும்.
English
A policy to provide incentives for the working poor population to save money for specified purposes such as retirement or home ownership. In the plan, the state or federal government would help the client set up the account in a financial institution and then match the amount the client puts into the account. IDAs are modeled somewhat after the individual retirement account system that tends to benefit more affluent citizens. See also stakeholding.