individual initiative
தனிப்பட்ட முயற்சி, தன்னூக்க நிலை
தமிழ் விளக்கம்
ஒவ்வொரு மனிதரும் தங்களுடைய சொந்தத் திறமையாலே, தன்னூக்கத்தாலேதான் தங்களுடைய பிரச்சனைகளிலிருந்து விடுபடவேண்டும், விடுபடமுடியும். அவ்வாறு விடுபட முடியாதவர்கள் தன்னூக்கமில்லாதவர்களாகவும், பிரச்சனையைக் கையாளத் திறனற்றவர்களாகவும் இருப்பார்கள் என்ற அர்த்தத்தில் பழமைவாதிகள் கையாளும் சொல்லாடல் / கண்ணோட்டம்.
English
A term used especially by conservative politicians to suggest that people, through their own merits, can rise above social problems. The implication is that those who have not overcome such problems have lacked certain personal qualities and that, therefore, their problems are their own fault. See also social Darwinism.