individual psychology theory
தனிமனித உளவியல் கோட்பாடு
தமிழ் விளக்கம்
மனிதருடைய வாழ்க்கை முறைகளிலிருந்தும், போதாமை, குறைபாடுகளை கடக்க முயலும் முயற்சிகளிலிருந்தே மனிதருடைய ஆளுமையும், உளப்பிணிகளும் உருக்கொள்கின்றன என்பதை விலக்கிய ஆல்பிரட் அட்லர் என்ற உளமருத்துவரின் கோட்பாடு பார்க்க : ஆஸ்திரியா உளநோய் மருத்துவர் அட்லரின் கோட்பாடு, அட்லெர் என்ற உளநோய் மருத்துவரின் சிகிச்சை முறை - ஆஸ்திரியா நாட்டு உளப்பிணி மருத்துவரான ஆல்பிரட் அட்லர் (1870–1937) மனித ஆளுமை மற்றும் அதன் தன்மைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கிய உளப்பிணி சிகிச்சைமுறை. மனிதர்களிடத்தில் எதிலும் முழுநிறைவடைய (superiority and perfection) வேண்டுமென்ற உள்ளார்ந்த துடிப்பு (இயக்கு சக்தி) இருப்பதாகவும், அந்தத் துடிப்பே மனித வாழ்க்கையையும், அவர்களுடைய சமூக ஆர்வங்களையும் வழி நடத்துகிறது எனவும், இதுவே சுயநலமற்ற பொது நன்மைகளை உருவாக்கும் காரணியாக அமைகின்றது என்று விளக்கிய கோட்பாடு. மனிதர்கள் சமயத்திலும் ஒழுக்கத்திலும் நிறைவடைய முடியும் என்ற கொள்கை.
மனிதர்கள் புரிந்துகொள்ளும்/ அறிந்துகொள்ளும் முறைகளுக்கேற்ப, ஆல்பிரட் அட்லர் உருவாக்கிய புலனுணர்வு சிகிச்சை - நடத்தை என்பது உள்ளுணர்வினலோ, ஆழ்மனத் தூண்டுதலாலோ நடைபெறும் ஒன்றல்ல. மாறாக ஒரு மனிதன் எப்படி விசயங்களைப் புரிந்து கொள்கிறான், புரிந்துகொண்டதை எப்படி ஒழுங்குமுறைப்படுத்துகின்றான் அதன் மீது எப்படிச் செயல்படுகின்றான் என்பதைப் பொறுத்தே நடத்தை அமையுமாதலால், நடத்தையை மாற்ற, ஒரு மனிதன் அறியும், புரிந்துகொள்ளும் பாணியை மாற்றவேண்டும் என்று சொன்ன ஆல்பிரட் அட்லெர் (1870– 1937) என்ற உளவியலாளர் வகுத்த சிகிச்சை முறை. இது பல்வேறு சிகிச்சை முறைகளாக வடிவெடுத்துள்ளது. ஆல்பெர்ட் எல்லிஸ் போன்றவர்கள் கடைப்பிடித்த சிந்தனையினால் ஏற்படும் நடத்தைக் கோளாறு, மனவெழுச்சிக் கோளாறு, வாழ்வியல் கோளாறு, புலனுணர்வுக் கோளாறு (rational–emotive therapy) சிகிச்சை முறைகளும், வில்லியம் கிலேசர் கடைப்பிடித்த எதார்த்தத்தை உணர வைக்கக் (reality therapy) கையாண்ட சிகிச்சை முறைகளும், ஆல்பிரட் அட்லெர் கையாண்ட மனித மைய (individual psychology) உளவியலும், சிந்தனையால் ஏற்படும் விதண்டாவாத நடத்தைக் கோளாறு போன்ற பல்வேறு சீர்கெகேடுகளைச் சரிசெயும் சிகிச்சை முறைகளும் இந்த விளக்கங்களிலிருந்தே உருவாயின.

English
A school of thought about the development of personality and psychopathology, originated by psychiatrist Alfred Adler (1870-1937), that emphasizes a person's lifestyle and the individual's striving to overcome inadequacy feelings. This is also known as Adlerian theory.