individualism
தற்பற்று தன்னலம், தன்னல உணர்ச்சி, தன்னல நடத்தை, தனிப்பண்பு, தனியுரிமைக் கோட்பாடு, தனி மனிதனின் தனிச் செயலுரிமையை ஆதரிக்கும் சமுதாயக் கொள்கை, தனிமனிதவாதம், தனிமனிதத்துவம், தனித்துவம்
தமிழ் விளக்கம்
தனி மனிதனின் தனிச் செயலுரிமையை (தனி மனிதவாதம், தனி மனிதத்துவம்) ஆதரிப்பதென்பது ஒரு தார்மீக, அரசியல், சமூக மற்றும் தத்துவ நிலைப்பாடு / கோட்பாடு. அது ஆழமான உள்விரிவாக்கம் கொண்ட சொல்லாடல். வரலாற்றின் சில கட்டங்களில் அது தேவையற்றது என்று கருதப்பட்டிருக்கின்றது. சில வரலாற்றுப் போக்குகள், தனித்துவக் கோட்பாட்டிலிருந்து, தனித்துவ இன அடையாளமாகவும், மதத்திலிருந்து சுதந்திரம் என்பதான பொருளாகவும் பரிணமித்திருக்கின்றது, அது தக்கது பிழைக்கும் என்ற டார்வீனிய கோட்பாடுடன் இணைந்து பொருள் கொள்ளப்பட்டிருக்கின்றது. அது தனிமனித சுதந்திரம், கட்டற்ற பொருளாதாரம், அரசுத் தலையீடின்மை என்று பலவற்றைப் பிரதிபலிக்கும் கோட்பாடாகவும் பொருள் கொள்ளப்பட்டது. மறுமலர்ச்சி யுகம் (renaissance), அறிவு யுகம் (enlightenment), புத்துணர்வு யுகம் (romanticicsm) நவீன யுகம் (modernism) என்று காலந்தோறும் இக்கருத்து விரிவடைந்து வந்துள்ளது. அது மனிதனின் உள்ளார்ந்த தார்மீக மதிப்பை எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது. மனிதர்கள் சுதந்திரமானவர்களாதலால் அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் அரசு மற்றும் புறவயக் கட்டுப்பாடுகளை எதிர்க்கின்றது. பொதுநலத்தை விட தனிமனிதரின் தன்னல வேட்கையே சமூகத்தை முன்னகர்த்துவதால் அதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமென்று வலியுறுத்துகிறது.
English
The sociopolitical and philosophical concept that emphasizes the pursuit of people's own interests rather than the common or collective good. See also rugged individualism.