individualization

தனிமனிதமயப்படுத்துதல், தனிப்பண்பறிதல்

தமிழ் விளக்கம்

தனித் தன்மையளித்தல் என்பது உள்விரிவாக்கம் கொண்ட கோட்பாடு. மேலோட்டமாக ஒன்றிற்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள குழு / கூட்டத்திலிருந்து ஒன்றை வேறுபடுத்தி, அதன் தனித்தன்மையைப் புரிந்துகொள்ளும் முறையாகும். இதை ஒருவரை அடையாளம் காண உதவும், 'அடையாள அளவுகோளாகவும்' (criterion of identity), 'நுணுகிக் காணமுடியாதவற்றை (indiscernibility principle) காணும் முறையாகவும்' கொள்ளலாம். இது ஒவ்வொரு மனிதருக்குள்ளிருக்கும் சமூகத் தன்மையிலிருந்து, மனிதர்களின் தனித்துவத்தை 'இது என்ற தன்மையை' 'தனிப்பண்புகளை' வேறுபடுத்தி அறியும் செயல்முறையாகும். இது கார்ல் யங்கின் மூலப்படிவம் அல்லது நனவிலி நிலை அல்லது முதிரா ஆன்மா, வாழ்க்கை அனுபவங்கள் மூலம் சிறிது சிறிதாக மனிதன் தனிப்பண்புள்ளவனாக மாறுவதைக் குறிப்பதாகும். ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்த இனம், வர்க்கம், குழுவின் பொதுத்தன்மைகளையும் கடந்து, எவ்வாறு தனிப்பண்புள்ளவனாக வேறுபட்டிருக்கின்றான் என்பதை அறிந்துகொள்வதென்பது அவனோடு உறவாட, அவன் சிக்கல்களைத் தீர்த்துவைக்க உதவுமென்பது சமூகப்பணிக்கு மட்டுமல்ல மானுட சேவைக்கான (உளவள மருத்துவம், கற்பித்தல், பயிற்சி அளித்தல் போன்ற) எல்லாப் பணிகளுக்கும் மிக முக்கியமானது. சமூகப்பணியாளரிடம் வரும் வாடிக்கையாளர், குழு மற்றும் சமுதாயத்தின் தனிப்பண்புகளை அறிதலென்பது சமூகப் பணியின் தொழில் நெறியாகவே வலியுறுத்தப்படுகிறது. தனி மனிதர், குழு, சமுதாயம் போன்ற சமூகப்பணியின் வாடிக்கையாளர்களின் தேவைகளும், நலனும் அடையாளம் காணத்தக்க அளவில் வேறுபட்டு, தனித்தன்மையுடையதாக இருக்குமென்பதும், அதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டுமென்பதும் சமூகப்பணி தனது முக்கியமான செயல்நெறி வழிகாட்டியாக வைத்துள்ளது. உதாரணமாக ஒரே வகுப்பில் படிக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் வயது, வகுப்பு போன்றவற்றில் பொதுத்தன்மை கொண்டிருந்தாலும், அவர்களின் பின்னணி, தேவைகள், சொந்த மற்றும் குடும்ப மதிப்பீடுகள், அபிலாட்சைகள் போன்றவற்றில் தனித்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது தெளிவு.

English

The ethical value in social work and other helping professions for understanding the client as a unique person or group rather than as one whose characteristics are simply typical of a class. In social work practice the term emphasizes the needs and welfare of each and every person as identifiable and unique and focuses on that which sets the person apart from all others. For example, a social worker adhering to this principle would treat a young unwed mother as though her background, needs, and values were hers alone and not necessarily the same as those of others in similar circumstances.