individualized education plan (IEP)

தனித்தன்மையுள்ள கல்வித் திட்டம், தனிப்பட்ட கல்வி திட்டம்

தமிழ் விளக்கம்

எந்தவொரு கல்வித் திட்டத்திலும் பயிற்றுவிப்பு மற்றும் மதிப்பீடு முறைகளில் ஊனமுற்றவர்களின் (இயலாமை, சட்டப்படிக்கான தகுதியின்மை, ஆற்றலின்மை, செயலூக்கத் தடங்கலான குறைபாடு) தனித்தன்மையும், தேவைகளும் சட்டபூர்வமாக கருத்தில் கொள்ளப்படவேண்டுமென்ற சட்ட விதிமுறை. அனைத்து ஊனமுற்ற குழந்தைகளுக்கான கல்விச் சட்டம் (1975), இயலாமையுள்ளவர்களுக்கான கல்விச் சட்டம் (1990) போன்ற சட்டங்கள் இத் தனித்தன்மையைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்க வலியுறுத்துகிறது.

English

A legal requirement, based on provisions in the Education for All Handicapped Children Act of 1975 (P.L. 94-142) and the 1990 Individuals with Disabilities Education Act (IDEA) (P.L.101-474), that each identified child with disabilities must be evaluated and that a plan to meet his or her unique needs must be developed before placement in any educational program.