Individuation

தனித்தன்மையடைதல், தனிப்பண்பு பெறுதல், தனித்துவப்படுத்தல்

தமிழ் விளக்கம்

ஒவ்வொரு மனிதரும் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் மற்றும் தான் சார்ந்துள்ள சமூகத்திலிருந்து வேறுபட்டவன் என்று உணரும் நிலை. இது குழந்தைப் பருவத்தில் தாயிடமும், தன்னைப் பராமரிப்பவரிடமும் சார்ந்திருக்கின்ற நிலை மாறி, படிப்படியாக சுயாதீன உணர்வு கொள்ளும் நிலையோடு ஒப்பிடப்படுகிறது. சமூகப் பணியாளர்கள், ஒரு நபர் தான் சார்ந்திருக்கும் குழுவின் தன்மைக்கேற்ப (வயது, பாலினம், குடும்பம் பிற சம்பிரதாயக் குழுக்கள்) எப்படி ஒரு குறிப்பிட்ட வழியில் சிந்திக்கும், செயல்படும் நிலையைப் (தனித்தன்மையை) பெறுகின்றார்கள் என்பதைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள்.

English

The process by which individuals come to understand themselves as differentiated from others and the whole social system of which they are a part. The term is frequently used to describe the process by which toddlers and young children grow progressively independent from their mothers or other caregivers. Some social work theorists use this term to emphasize the particular ways in which one acts as a member of a given group (age group, gender group, family or formal group). See also separation—individuation.