industry versus inferiority
விடாமுயற்சி Vs தாழ்உணர்வு
தமிழ் விளக்கம்
எரிக் எரிக்சன் (1902-1994) என்ற உளவியலாரின் உள சமூக விருத்திக் (psychosocial development) கோட்பாட்டில் எடுத்துரைத்த எட்டு வளர்ச்சிப் பருவ நிலைகளில் விடாமுயற்சி Vs தாழ்உணர்வு என்பது நான்காம் நிலை. இந்நிலை 6 -12 வயதிற்குள் நிகழ்கிறது. இந்தப் பருவத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், தன் வயதொத்த சகாக்கள், மற்றும் பள்ளி கல்வியும் அவர்கள் முன்வைக்கும் சிக்கலான எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ளத் தேவையான சமூகத் திறன்களையும் ஆற்றலையும் பெற முயற்சிப்பர். தன் வயதொத்த சகாக்களோடு ஒப்புமைப்படுத்திப் பார்க்கும் போது தன்னுடைய திறன்கள் போதாமையுள்ளதாக, குறையுடையதாக உணரும் பட்சம் அதனால் தாழ்மை உணர்ச்சி கொள்வர்.
English
According to the psychosocial development theory of Erik Erikson (1902-1994), the fourth stage of development occurring at about ages six to 12. The child may seek to acquire the basic social skills and competencies required for effective survival in the adult world or may come to feel unworthy and less able than peers to accomplish these tasks.