inequality
ஏற்றத்தாழ்வு, சமத்துவமின்மை, சமமற்ற, சமனற்ற
தமிழ் விளக்கம்
ஆற்றல், வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அணுகக்கூடிய நிலை, சலுகைகள் பெறுதல், நீதி மற்றும் நியாயத்தைப் பெறும் சூழல் போன்றவற்றில் சமூகத்தில் காணப்படும் சமமின்மை / ஏற்றத் தாழ்வு. இது பொருளாதாரம் (உடமைகள்), தொழில்நுட்பம், கல்வி, பாலினம், ஆரோக்கியம் போன்ற பல தளங்களில் வெளிப்படுகிறது. ஒன்றில் காணப்படும் சமமின்மை பிறிதொன்றை வலுப்படுத்துகிறது. ஒன்றில் ஏற்படும் சமத்துவம் பிறவற்றிலும் சமநிலையை எட்ட உதவுகிறது.
English
Social disparity in power, opportunity, privilege, and justice. The term often implies the actual disparity of possessions, education, and health care.