inequity

நேர்மையின்மை, கொடுமை, நேர்மையற்ற செயல். ஒப்புரவின்மை, அநீதியான

தமிழ் விளக்கம்

அதிகாரம் பெறுவதிலும், வாய்ப்புகளைப் பெறுவதிலும், நியாயமாக நடத்தப்படுவதிலும், சமமான உரிமைகளை அனுவபவித்தலிலும் காணப்படும் ஏற்றத்தாழ்வு. மற்றவர்கள் அடைய முடிந்த இலக்குகளையோ, வாய்ப்புகளையோ பெறமுடியாதவாறு தடுக்கும் நிறுவன ரீதியான பாகுபாடுகளையும், சமூகத் தடைகளையும் சமூகப்பணியாளர்கள் இந்த வார்த்தையால் (அநீதியான, நேர்மையற்ற) குறிப்பர். ஏற்றத்தாழ்வு (inequality) சமமின்மையைக் குறிக்கும். inequity யிலும் சமமின்மை இருந்தாலும், அது அநீதியுடனும், நேர்மையின்மையுடனும் சமந்தப்பட்டது. இது நியாயமான நீதிமன்ற விசாரணைகளும், தங்களுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதிலும் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட நிலையைக் குறிக்கும்.
பார்க்க glass ceiling - கண்ணாடிக்கூரை மற்றும் generational equity தலைமுறைகளுக்குள்ளே சமத்துவம்

English

A disparity of power or opportunity to receive just treatment or equal rights. Social workers often apply this term to social conditions in which people face institutional discrimination or social barriers that impede their efforts to achieve the same goals available to others. The term usually differs from inequality in that inequity implies lack of opportunity for justice or privilege (such as fair court trials or opportunities to elect representative officials). See also "glass ceiling" and generational equity.