infant mental health
மழலைகளின் மனநலம்
தமிழ் விளக்கம்
கருவுற்ற காலத்திலிருந்து மூன்று வயது வரைக்கும், இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளும் மழைலைகள் மற்றும் அவர்தம் பெற்றோரின் மனநலத்தைத் தீர்மானிக்கும் காரணிகளைப் புரிந்துகொள்ளவும் அதை மேம்படுத்துவதுமானதான பல்துறை சார்ந்த அணுகுமுறை. இதில் சமூகப்பணியாளர்கள், குழந்தைநல மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், குழந்தை நல செவிலியர், விஷேசக் கல்வியாளர்கள், வளர்ச்சி உளவியலாளர்கள் (developmental psychology) இணைந்து, மழலைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் மனநலப் பிரச்சனைகளைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கும், எதிர்காலப் பிரச்சனைகளைத் தடுப்பதற்கும் வழிமுறைகளைக் கையாள்வர். உகந்த வகையில் வளரவும், பாதுகாப்பான உணர்வுகளைப் பெறவும், உலகோடு ஆரோக்கியமாக உறவாடவும், பிரச்சனைகளைத் திறனுடன் கையாள அடித்தளமிடுவதும் இதன் நோக்கம். இது பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட, துன்புறுத்தலுக்குள்ளான, இழப்புகளுக்கு ஆளான குழந்தைகள் மற்றும் போதைப் பழக்கத்திற்கு ஆட்பட்ட, உடல் மன நோயினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களைக் கொண்ட குழந்தைகளிடம் கவனம் செலுத்துகிறது.
English
A multidisciplinary specialty to understand and improve the factors that influence the psychological well-being of infants. Social work is joined by pediatrics, nursing, special education, psychiatry, and developmental psychology to develop methods of preventing future mental illness and to assess and treat those psychological problems that are found in infants. The focus is usually on at-risk infants, especially those who are potentially at risk of neglect, abuse, or deprivation or whose parents have substance abuse or physical or mental illness.