infantile autism
மதியிறுக்கம், புற உலகச் சிந்தனைக் குறைபாடு, ஒருவகையான நரம்புக் கோளாறினால் ஏற்படும் மன இறுக்கம், சமூகத் தொடர்பு சீர்குலைவு
தமிழ் விளக்கம்
மதியிறுக்கம் எனப்படும் Autism ஒரு சிக்கலான, தீவிரமான நோய். அறிவியல் ரீதியான, உறுதியான, சிகிச்சை முறை இல்லாத நோய். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, பத்தாயிரத்தில் ஒன்று என்ற அளவிலிருந்து கடந்த பதினைந்து வருடங்களில் நூற்றி அறுபத்தியாறில் ஒன்று என்ற அளவில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. மதியிறுக்கம் ஒரு மனநல நோய். இந்நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சில சமயம் உடல் ரீதியான வளர்ச்சிக் கோளாறுகள் (co-occuring symptoms அதாவது சேர்ந்தமைந்த அறிகுறிகள்) இருந்தாலும், அவை இந்த நோயின் முக்கியக் கூறுகள் அல்ல. தன்னையொத்த பிற குழந்தைகளிடம் பழகும் விதம், பேச்சுத்திறனின் வளர்ச்சி, புலன் சார்ந்த உணர்ச்சிகளின் ஒழுங்கு (sensory balance), மற்றும் விளையாடும் முறைகள் ஆகியவற்றில் பிற சாதாரணக் (Neurologically typical) குழந்தைகளிடமிருந்து வித்தியாசப்பட்டிருப்பதே இந்த நோயின் பிரதானமான தன்மையாகும். மதியிறுக்கம் ஒரு நிறப்பிரிகை வகையிலான நோய் (Spectrum disorder). அதாவது, இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் எல்லாம் ஒரே மாதிரியோ, ஒரே அளவிலோ பாதிக்கப்படுவதில்லை. உதாரணமாக, பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு அருகே யார் சென்றாலும், தொட்டாலும், கொஞ்சமும் பொறுக்க முடியாத அளவுக்கு வேதனையாக இருக்கும். சில குழந்தைகளுக்கோ தொடுவது, இறுக அணைப்பது போன்றவை மிகவும் பிடித்திருக்கும். சில குழந்தைகளுக்கு ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேச வராது. சில குழந்தைகள் அர்த்தமே இல்லாவிடிலும் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த நோய் கண்டறியப்பட்ட குழந்தைகள் எல்லாருக்குமே பிறரோடு பழகுவதில் ஏதாவது ஒரு வகையில் சிக்கல் அல்லது தயக்கம் இருக்கும். ஏதோ ஒரு விதத்தில், ஒரு தனி உலகத்தில் தாம் இருப்பது போன்ற பாவனை இருக்கும். பல மனநல நோய்களைப் போல மதியிறுக்கத்தைக் கண்டறிவதற்கும் எந்த உடல் ரீதியான மருத்துவப் பரிசோதனையும் இல்லை. இரத்தப் பரிசோதனை செய்தோ, எக்ஸ்-ரே எடுத்தோ இதைக் கண்டறிய முடியாது. ஒரு குழந்தை எப்படிப் பழகுகிறது என்பதை வைத்தே இதைக் கண்டறிய முடியும்.
English
See autistic disorder.