inference
உய்த்துணர்தல், அனுமானம், முடிவு, முடிவாகப்பெற்ற பொருள்
தமிழ் விளக்கம்
1. நேரடியாகப் பார்க்காவிட்டாலும், நேரடி அனுபவம் இல்லாவிட்டாலும், காரண காரியத் தொடர்புகளை வைத்து ஊகித்தறியும் முறை. 2. கேள்விப்பட்டவற்றை வைத்தும், உண்மை என்று அனுமானித்தவைகளை வைத்தும் தருக்க ரீதியான முடிவுகளை உய்த்துணர்தல் 3. உண்மை என்று அறியப்பட்ட அறிவு கொண்டும், சான்றுகளைக் கொண்டும் உய்த்துணரும் முறை. உதாரணமாக உறவினர் வீட்டிலிருந்து திரும்பும் குழந்தையின் உடலில் சிராய்ப்புக் காயங்களோடும், பயத்தோடும், பதட்டத்தோடும் இருக்கும் பட்சத்தில் அக்குழந்தை உடல்ரீதியான சித்ரவதைக்கு ஆளாகி இருக்க வேண்டும் என்ற சமூகப்பணியாளரின் அனுமானம்.
English
Forming a conclusion based not on direct observation but on reasoning from something known. For example, a clinical social worker notes that a young child returns from a visit with a noncustodial parent covered with bruises and scars and laden with anxiety and fear. The social worker infers but has not seen child abuse.