infertility

கருவுறாமை, வளமின்மை, கருத்தரிக்காமை, குழந்தையின்மை

தமிழ் விளக்கம்

கருத்தரிக்காமை என்பது பாதுகாப்பற்ற உடலுறவில் ஓராண்டிற்கு ஈடுபட்டாலும், ஆணுக்கோ, பெண்ணுக்கோ அல்லது இருவருக்குமோ குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத ஆற்றலின்மையைக் குறிக்கும். கருவுறாமை பலகாரணங்களால் ஏற்படலாம். போதுமான அளவில் உடலுறவு கொள்ளாமல் இருப்பது, தவறாக உடலுறவு கொள்வது, கருத்தடை முறைகளைக் கையாள்வது, மது போதைப் பழக்கம், ஆரோக்கியச் சீர்கேடு, கதிரியக்க மற்றும் நச்சுப் பாதிப்புகளால் கருவுறாமை நிகழலாம். ஆண்களுக்கு ஆணுருப்பில் ஏற்படும் கோளாறுகளான, விதையுருப்பின் வெப்பநிலை, விறைப்பின்மை, சீக்கிரமோ அல்லது தாமதமாகவோ விந்து வெளியேறல், விந்துக்குழாய்களில் அடைப்பு, நோய்த் தடுப்பாற்றலின்மை போன்ற பிரச்சனைகளால் மலட்டுத்தன்மை ஏற்படலாம். பெண்களுக்கு கருமுட்டைக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, கருப்பையின் உட்புறத் திசுக்கள் இடம்மாறி வளர்வது, ஹார்மோன் பிரச்னைகள், கர்ப்பப்பை முகப்பு கோளாறுகள், தொற்று நோய்கள், உடலுறவின் போது ஏற்படும் யோனி இறுக்கம், உடலுறவு இச்சையின்மை போன்ற காரணங்களால் கருத்தரிக்க இயலாமல் போகலாம்.

English

The inability to conceive despite at least one year of unprotected sexual intercourse. Infertility sometimes may result from a lack of sexual intercourse, the use of certain techniques in intercourse, effects of contraception, health factors, alcohol and drugs, radiation, and toxic substances. Infertility in men is attributed to problems related to testicular temperature, blockage of ducts, retrograde ejaculation, immunological problems, and sexual disorders such as erectile disorder or premature ejaculation. Infertility in women is attributed to such problems as blocked fallopian tubes, endometriosis, cervical conditions, hormonal problems, infectious disease, and sexual disorders including vaginismus and inhibited sexual desire.