inflation

பணவீக்கம்

தமிழ் விளக்கம்

பொருளாதாரத்தில் பண வீக்கம் (Inflation) என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தைக் கொண்டு பொருட்களை வாங்கும் திறன் குறைந்து போவதைக் குறிக்கும். விலை அதிகரிக்கும் போது ஒரு நாணயத்தைப் பயன்படுத்தி வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவையின் அளவும் குறைகிறது, ஆகவே பணவீக்கம் என்பதை, பணத்தின் வாங்கும் திறனின் வீழ்ச்சி என்றும் கூறலாம். அதிகபட்ச பணம் குறைந்த பட்ச பொருட்களைத் துரத்திச் செல்வது பணவீக்கம் எனப்படுகிறது. பணத்தின் மதிப்பு குறைவடைவது என்பதை இது குறிக்கிறது. பருவகால விலையேற்றங்கள் இதில் வருவதில்லை அல்லது எதிர் காலத்தில் விலையேறும் என்று எண்ணி பொருட்களை ஊக வியாபாரத்திற்காகப் பதுக்கி வைப்பதால் ஏற்படும் விலையேற்றத்தை இது குறிப்பதில்லை. விலைவாசியானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதைத்தான் பொதுவாக பணவீக்கம் என்று குறிக்கின்றனர். தேவை விதியின்படி விலை உயர்ந்தால் தேவை குறையும். ஆனால் பணவீக்க காலத்தில் அடிப்படையான பொருட்களின் விலையுயர்ந்தாலும் தேவை உயரும். அதன் காரணம் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் பணம் அதிகமாகச் சேர்வதால் அவர்களின் தேவை அளிப்பைவிட அதிகரிக்கிறது. குறுகிய காலத்தில் அளிப்பை அதிகரிக்க முடியாத காரணத்தால் விலை உயருகிறது. பணவீக்கத்தினால் ஏற்படும் பொருளாதாரத்தின் மீதான பாதிப்புகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் ஆகிய இரண்டும் உண்டு. பணவீக்கத்தின் எதிர்மறை விளைவுகளில் 1. குறிப்பிட்ட காலத்திற்கு பணம் மற்றும் பணம் சார்ந்த பிற பொருட்களின் அசல் மதிப்பு இழப்பு, 2. எதிர்கால பணவீக்கத்தைப் பற்றி உறுதியாகக் கணிக்க முடியாததால் முதலீடு மற்றும் சேமிப்புகளுக்கான ஊக்கம் குறைதல்.

English

Increases in the cost of living in an economy and the resulting decrease in purchasing power.