influence peddling

செல்வாக்கை முறைகேடாகப் பயன்படுத்தல் / காரியம் சாதித்தல், தொடர்புகளை தவறாகப் பயன்படுத்தல், பிரபால்யத்தை வைத்துக் காரியம் சாதித்தல்

தமிழ் விளக்கம்

அரசு அல்லது நிறுவன அதிகாரத்திலிருப்பவர்களிடத்தில் ஒருவர் தனக்குரிய செல்வாக்கை / தொடர்புகளை / பிரபால்யத்தை வைத்து, தனக்கு வேண்டியவர்களுக்கு சலுகைகளோ, முன்னுரிமைகளோ பெற்றுத்தந்து அதற்குப் பிரதியுபகாரமாக, பணத்தையோ வெகுமதிகளையோ பெறுதல். தனது பிரபால்யத்தை வர்த்தகமாக்கும் போக்கு, சட்டப்படித் தவறில்லை என்றாலும், இந்தச் செயல் கறைபடிந்த செயலாகவே கருதப்படுகிறது. அரசியலனைவு நாடுவது (lobbying) ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறை என்றாலும், அதைச் சுயநலத்திற்கு பயன்படுத்துவது முறைகேடான ஜனநாயக முறையாகும்.

English

Facilitating access to policymakers for money or bribing public officials on behalf of third parties.