informal sanction
இயல்பான அனுமதி, முறைசாரா அனுமதி
தமிழ் விளக்கம்
ஒரு மனிதர் எப்படி, எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும், எப்படிப் பணியாற்ற வேண்டுமென்பதற்கு அவருடைய குடும்பம், அவர் சார்ந்த குழு, அவர் சார்ந்த நிறுவன நபர்கள் கொடுக்கும் சமூக அழுத்தமே இயல்பான அனுமதி எனப்படுகிறது. இந்த அனுமதி புன்னகை அல்லது முறைத்தல் மூலமாகவோ, ஒரு செயலில் சேர்த்துக்கொள்ளல் அல்லது விலக்குதல் மூலமோ, கருத்துக்களை அங்கீகரிப்பது அல்லது நிராகரிப்பதன் மூலமாகவோ தரப்படுகிறது. இயல்பான அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமல்ல ஒத்த தன்மையுள்ள குழுக்கள் மற்றும் இனக் கூட்டதிற்கும் பொருந்தும்.
English
The social pressure a family, group, or organization's members impose on its individuals to enforce rules of conduct, norms of behavior, and work performance. These sanctions take the form of disapproving looks, exclusion from social activities, isolation, and disregarding one's ideas. Informal sanctions also apply to groups and communities, especially to identifiable racial and ethnic groups.