informal sector

முறைசாராத் துறை

தமிழ் விளக்கம்

முறைசாராத் துறை என்பது பொருளாதாரம், சமூகவியல், மருத்துவம் போன்ற பலதுறைகளிலும் பயன்படுத்தப்படும் வார்த்தை. Informality என்பது தமிழில் முறைசாராத, சம்பிரதாயமற்ற, இயல்பான என்று பொருள் கொள்ளப்பட்டாலும், இதில் முறையற்ற தன்மைகள் ஏதுமில்லை. அரசினால் முறையாகக் கண்காணிக்கப்படாத, நிதிநிறுவனங்களின் ஆதரவற்ற, வெளிப்படைத்தன்மையற்ற வணிகப் பரிமாற்றங்களுக்கு வாய்ப்பளிக்கின்ற (கள்ளச் சந்தை, இரகசிய பண்ட பரிமாற்றம், திறந்த வெளிச்சந்தை (agora), விரைந்து செயல்படுகின்ற (System D), நிறுவன வரவு செலவுகளில் பதியப்பெறாத உற்பத்தி மற்றும் வணிகச் செயல்முறைகள் போன்ற பல செயல்பாடுகளைக் குறிக்கும் பொதுச் சொல். இது பெரும்பாலும் சிறிய முதலீட்டில் சுயதொழில் செய்கின்ற, தொழில் முனைவர்களால் நிரம்பியுள்ள துறை. முறைசாராத் துறை என்பது முதலில் வளரும் நாடுகளின் நவீன தொழிலகங்கள் அல்லாத, வேலைவாய்ப்பு உத்தரவாதம் இல்லாத, சமூகப் பாதுகாப்பு இல்லாத பிழைப்பு முறைகளை, பொருளாதார அமைப்பை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. பின் அரசின் கட்டுப்பாடுகளிலிருந்து (வரி, தொழிலாளர் பாதுகாப்பு) தப்பிக்க சிறு தொழில் முனைவர்களால் உபயோகப்படுத்தப்பட்டது. முறைசாராப் பொருளாதாரம் பரந்துபட்ட பொருளுற்பத்தி மற்றும் பிழைப்பு முறைகளை உள்ளடக்கியது. வாய்ப்புகள் குறைந்துள்ள பொருளாதாரச் சூழலில், ஜீவித்திருக்க வேண்டி ஏழைகளால் கையாளப்படும் சமாளிப்பு உத்திகளையும், அரசின் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிக்க சில தொழில்முனைவோர்கள் கையாளும் வழிமுறைகளையும் உள்ளடக்கியது. அவையாவன:
1. ஜீவித்திருக்க வேண்டி செய்யப்படும் தினக்கூலிப் பணிகள், தற்காலிக வேலைகள், சம்பளமில்லாமல் உணவுக்காகவும், சலுகைகளுக்காகவும் செய்யப்படும் வேலைகள் (unpaid jobs), ஜீவித்திருக்க வேண்டி செய்யப்படும் விவசாயம் (subsistance agriculure), பலவிதமான குற்றேவல்களில் ஈடுபடுதல் (multiple job holding).
2. வரி ஏய்ப்பிற்காகவும், தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து தப்பிக்கவும், நிறுவனக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபடவும் பதிவு செய்யாமல் தொழில் / வணிகத்தில் ஈடுபடுவது.
3. ஏமாற்றுதல், இலஞ்சம் வாங்குதல் போன்ற இரகசியச் செயல்கள் மூலம் பொருளீட்டும் முறை.
இந்தப் பொருளாதார அமைப்பை எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும், இதுவே வளரும் நாடுகளின் ஏழைகளுக்கு வேலை வாய்ப்பையும், பிழைப்பாதாரங்களையும் வழங்குகிறது.
4. மருத்துவப் பராமரிப்பில் குடும்பத்தினராலும், நண்பர்களாலும் வழங்கப்படும் பராமரிப்பைக் குறிக்கும்.
5.. சமூக நலத் துறையில் அரசு தவிர தொண்டு நிறுவனங்களாலும், பிற இலாப நோக்குடைய நிறுவனங்களாலும் வழங்கப்படும் சேவையைக் குறிக்கும்
6. சமூகவியலில் சம்பிரதாயமான நிறுவனங்களைத் தவிர்த்த குடும்பம் மற்றும் இயல்பான குழுக்களைக் குறிக்கும்.

English

1. Economic activity that is outside the official financial system of a nation or community, that is, the underground economy. The informal sector is comprised mainly of self-employed small entrepreneurs who buy, sell, and barter services and goods, which may or may not be legal. Usually taxes are not paid, except as bribes, and government protections are not rendered. Many nations, especially the less developed ones, consider the informal sector a necessity for taking care of the poor people in the population. 2. A synonym for informal care—that which is provided by family or friends as opposed to established care-giving institutions). 3. A synonym for independent sector—welfare activities provided by charitable agencies or by private profit-seeking businesses.