informed consent

விபரமறிந்து தெரிவிக்கும் இசைவு

தமிழ் விளக்கம்

ஒரு வாடிக்கையாளரின் பிரச்சனைகளைத் தீர்க்க, கையாளப்படவிருக்கின்ற நோயறி முறைகள் (சோதனைகள்), கையாளப்படவிருக்கின்ற சிகிச்சை, சிகிச்சைக்குப் பிந்தைய தொடர்கவனிப்பு, வாடிக்கையாளர் பிரச்சனை பற்றிய ஆய்வு போன்ற செயல்முறைகளின் சாதக பாதகங்களைப் பற்றியும், மாற்று வழிகள் இருந்தால் அதைப் பற்றியும் தெரிவித்து ஒப்புதல் / சம்மதம் பெரும் நடைமுறை. இந்த மாதிரி சம்மதம் பெறாதபோது தொழில் முறைகேடுகள் பற்றிய வழக்கு உருவானால் அதில் வெற்றிபெற சிரமமேற்படலாம்.
பார்க்க: implied consent - உட்கிடையான இசைவு, மறைமுக ஆதரவு, குறிப்பால் ஒப்புதலளித்தல் - கற்பழிப்பு போன்ற வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் சைகைகள், குறிப்புணர்த்தல், செயல்கள் அல்லது உரையாடல், எதிர்ப்பில்லாத மௌனம், செயலின்மை போன்றவற்றை வைத்து சம்மதத்தை அல்லது உடன்பாட்டைக் குறிப்பாலுணர்த்துவதாக பிரதிவாதி (குற்றம் சாட்டப்பட்டவர்) தன் தரப்பை நியாயப்படுத்தும் நிலை.

English

The granting of permission by the client to the social worker and agency or other professional person to use specific intervention, including diagnosis, treatment, follow-up, and research. This permission must be based on full disclosure of the facts needed to make the decision intelligently. Informed consent must be based on knowledge of the risks and alternatives. One of the greatest risks in professional malpractice suits is failure to obtain informed consent. See also implied consent.