infrastructure
உள்கட்டமைப்பு
தமிழ் விளக்கம்
ஒரு சமூகம் அல்லது நிறுவனம் இயங்குவதற்குத் தேவைப்படும் / நிர்வாகம் செயல்படுவதற்கு அவசியமாக இருக்கும் சேவைகள் மற்றும் வசதி வாய்ப்புகளையே உள்கட்டமைப்பு என்கிறோம். சாலைகள், நீர் வழங்கல், சாக்கடைகள், மின்ஆற்றல் தொகுதிகள், தொலைத் தொடர்புகள் மற்றும் இது போன்று அத்தியாவசியத் தேவைகளையே இச்சொல் குறிப்பிடுகிறது. உள்கட்டமைப்பு, பொருட்களின் மற்றும் சேவைகளின் உருவாக்கத்தை எளிதாக்குகிறது. உதாரணத்திற்கு மூலப் பொருட்களை ஒரு தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லவும் தயாரிப்புப் பொருட்களைச் சந்தைகளில் விற்கவும், பயணம் செய்ய சாலைகள் உதவுகின்றன. இந்தச் சொல் பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அடிப்படை சமூக சேவைகளையும் உள்ளடக்கும். இராணுவப் பேச்சுவழக்கில் அந்தச் சொல், இராணுவப் படைகளின் இயக்கம், வேறு இடங்களுக்கு அனுப்பிவைத்தல் மற்றும் உதவிகளுக்குத் தேவைப்படும் கட்டடங்கள் மற்றும் படைமுகாம்கள் போன்றவற்றைக் குறிக்கும். உள்கட்டமைப்பு பொறியியல் மற்றும் கட்டுமானம், சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி, இராணுவம், இடர்கால உள்கட்டமைப்பு, நகர்ப்புற உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், நில மேம்பாடு மற்றும் நில வளர்ச்சி, பொதுப் பணிகள் மற்றும் பொதுச் சேவைகள், போக்குவரத்துக்குரிய உள்கட்டமைப்பு, ஆற்றல் உள்கட்டமைப்பு, நீர் நிர்வாக உள்கட்டமைப்பு, தகவல் தொடர்புகள் உள்கட்டமைப்பு, கழிவு நிர்வாக வசதிகள், நிலவியல் கண்காணிப்பு வலைத்தொகுப்புகள், திட்டமிடுதல் மற்றும் நிர்வாகம் என்று உள்கட்டமைப்பு பலவகைப்படும்.
English
The foundation facilities, buildings, and systems of a society, such as its highways, parks, public spaces, railroads, bridges, telephone lines, power plants, and water and sewage lines.