inner city

உள் நகரம், நகரின் உட்பகுதி

தமிழ் விளக்கம்

ஒரு நகரத்தின் அல்லது மாநகரத்தின் மையப்பகுதியே உள்நகரம் எனப்படுகின்றது. ஆனால் வழக்கத்தில் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள குறைந்த வருவாய்ப் பிரிவினரின், மக்கள் நெருக்கம் அதிகமுள்ள, ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினர் வாழ்கின்ற, தரமற்ற உள்கட்டமைப்புகளைக் கொண்ட குடியிருப்புகளைக் குறிக்கும் இடக்கரடக்கல் சொல்லாகப் (தீயசொல்லை மறைத்துக்கூறும் மங்கலக் குறிப்பு) பயன்படுத்தப்படுகின்றது.

English

An area within a city that is usually characterized by high population density, racial ghettos, and a decaying infrastructure.