inoculation

(நோய்) காப்பு மருந்தூசி, நோய்த்தடுப்பு ஊசி மருந்து, தடுப்பூசி, காப்பு மருந்திடுதல், உடலுக்குள் நோய்க்கிருமி உட்செலுத்துதல், தடுப்பாற்றுவித்தல், பாதிக்கப்படாமைச் செய்தல், நோய் எதிர்ப்புத்திறனூட்டல்

தமிழ் விளக்கம்

சில நோய்கள் தொற்றுவதைக் குறைக்கவும் / தடுக்கவும் / பாதிக்கப்படாமலிருக்கச் செய்யவும், நோய் எதிர்ப்புத் திறனூட்டலை அதிகரிக்கக் கையாளப்படும் மருத்துவ முறைகள். எந்த தீ நுண்மத்தாலோ அல்லது பாக்டீரீயாவலோ ஒரு நோய் உருவாகிறதோ, அந்த நோயைத் தடுக்க வீரீயம் குறைக்கப்பட்ட நோய்க்கிருமிகளை ஊசிமூலமோ, வாய்வழியாகவோ மனிதர்களுக்குக் கொடுக்கும் போது, அந்தக் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் அளவிற்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தி உருவாகும். Immunization, inoculation or vaccination என்ற வார்த்தைகள் ஒருபொருள் தரத்தக்க வார்த்தைகளாகவே பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

English

The process of introducing, usually through injection or ingestion, a serum or vaccine into a living organism to create some immunity to disease. The process works by stimulating the organism's production of disease-resistant antibodies.