insanity

பைத்தியம், கிறுக்கு, மயற்பகை, மேகவிருளி, மனநிலை பாதிப்பு, பித்து, கேனத்தனம், கோட்டித்தனம், உன்மத்தம்

தமிழ் விளக்கம்

தீவிர மனநிலை பாதிக்கப்பட்டவர்களைக் குறிக்க பயன்படுத்தப்படும் வழக்கு மற்றும் சட்டச் சொல். தான் செய்வது தவறு என்று உணரமுடியாத அல்லது அச்செயல்களின் விளைவுகளை அறிய முடியாத அளவிற்கு மனப்பிறழ்வு நிலை கொண்டவர்களைப் பைத்தியம் பிடித்தவன் என்று சட்டம் சொல்கிறது. பொது வழக்கில் இவர்களைக் கோட்டி, கிறுக்கன், வெறிபிடித்தவன், உன்மத்தம் பிடித்தவன் என்கிறார்கள். ஆனால் மனநல மருத்துவர்கள் இந்தச் சொல்லை பயன்படுத்துவதில்லை. மனப்பிறழ்வு உள்ளவர்கள் செய்த குற்றங்களையும் அதை நீதிமன்றங்கள் கையாண்ட முறைகளையும் பற்றி விளக்குவதே McNaughten rule மற்றும் Durham rule என்கிறார்கள்.
பார்க்க: McNaughten rule - மெக்நாட்டின் விதி - மெக்நாட்டின் விதி என்பது குற்றம் சுமத்தப்பட்டவர் அப்பாவியா அல்லது மனநிலை பிறழ்ந்தவரா என்பதை நீதிமன்றங்கள் முடிவுசெய்ய உதவும் சட்ட வழிமுறைகளாகும். இந்த வழிமுறைகள் டேனியல் மெக்நாட்டின் (Daniel M'Naghten) என்ற பிரிட்டிஷ் தச்சுத்தொழிலாளி, மனப்பிறழ்வு நிலையில் எட்மண்ட் டிரம்மண்ட் (Edward Drummond) என்ற அரசு அதிகாரியைக் கொலை செய்த வழக்கில், மெக்நாட்டின் செய்த குற்றத்தின் தன்மையைப் பற்றிய விவாதங்களிலிருந்து பெறப்பட்டதாகும். மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்ட நபர், தான் என்ன செய்கிறோம் என்று அறியாமலும், தான் செய்யும் காரியத்தின் விளைவைப் பற்றி அறியாமலும் செய்வதால் அந்த குற்றத்திற்கு அவர் பொறுப்பாக முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மிகுந்த பரபரப்பை உண்டாக்கிய இந்தத் தீர்ப்பு உளப்பிணியாளர்கள் (பைத்தியக்காரர்கள் - insane) கணநேர உணர்ச்சித் தாக்குதலுக்குள்ளாகி ஒரு செயலின் விளைவறியாது குற்றமிழைப்பதால், குற்றப்பொறுப்பிலிருந்து அவர்களுக்கு விதிவிலக்களிக்கும் குற்றவியல் நடைமுறை உருவானது. இந்த வழக்கிற்குப் பின் குற்றம் சாட்டப்பட்டவர் மனப்பிறழ்வு விளைவினால் அக் குற்றத்தை செய்தாரா என்று கண்டறியும் சோதனை (அடக்கமுடியாத உணர்ச்சி சோதனை - irresistible impulse test) முறைகள் உருவாகி, மனப்பிறழ்வு நிலையிலிருந்து குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால், அக்குற்றப் பொறுப்பிலிருந்து அவர் நீதி மன்றத்தால் விடுவிக்கப்படலாம் என்ற நிலை சிறுது சிறிதாக உருவானது.
Durham rule - துர்ஹாமின் விதி - ஒருவர் மனநோயாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவர் செய்த குற்றத்திற்கு பொறுப்பல்ல என்ற வாதம்.

English

A legal and lay term used to indicate the presence of a severe mental disorder in an individual. Used as a legal term, the mental disorder is considered to be so serious as to negate the individual's responsibility for certain acts such as criminal conduct. The person declared "legally insane" is thought to lack substantial capacity either to appreciate the wrongfulness of a crime or to act in conformity with the requirements of the law. Used as a lay term, insanity is roughly synonymous with "crazy" or "psychotic." The term is not used by mental health professionals in their diagnostic nomenclature. See also McNaughten rule and Durham rule.