insight therapies

அகத்தெளிவு / உட்தெளிவு சிகிச்சை முறைகள்

தமிழ் விளக்கம்

ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய உணர்வுகள், ஆழ்மன இச்சைகள், சிந்தனைப்பாங்கு, அவரின் நடத்தைக்கான அடிப்படை காரணங்கள் போன்றவற்றைப் புரிந்துகொள்ளவும், அதைப்பற்றி மேலும் அதிக விழிப்புணர்வு பெறவும் உதவும் சிகிச்சை முறைகள். வாடிக்கையாளரின் உளசமூக வளர்ச்சிப் பின்னணியைக் கவனத்தில் கொண்டு, விரிவான முறையில், நீண்ட காலத்திற்கு, பொதுவான இலக்குகளை அடைய செய்யப்படும் சிகிச்சை. இது புலனுணர்வுச் சிகிச்சை (cognitive therapy), நடத்தைச் சிகிச்சை (behaviour therapy), சிக்கல் தீர்க்கும் தணியாளர் பணி (problem-solving casework), செய்பணியை மையமாகக் கொண்ட சிகிச்சை போன்ற குறுகியகாலச் சிகிச்சை முறைகளிலிருந்து வேறுபட்டது. உளப்பகுப்பாய்வு, இருத்தலியல் (வாழ்வியல்வாதம் - existential social work) சமூகப்பணி, வாடிக்கையாளரை மையப்படுத்திய சிகிச்சை (client centered therapy) முறைகள் இதற்கு உதாரணங்களாகும்.

English

Treatment approaches oriented to helping individuals achieve greater self-awareness and understanding of their own conscious and unconscious motivations, emotions, thought processes, and underlying reasons for their behaviors. These forms of therapy tend to be more long-term, broader, and more general in goals and focused on one's historical psychosocial development. They are contrasted with cognitive therapy, behavior therapy, problem-solving casework, and taskcentered treatment. Some types of insight therapies include psychoanalysis, existential social work, and client-centered therapy.