Institute for the Advancement of Social Work Research (IASWR)
சமூகப்பணி ஆய்வு மேம்பாட்டிற்கான (ஊக்குவித்தலுக்கான) நிறுவனம்
தமிழ் விளக்கம்
சமூகப்பணியில் ஆய்வுத் திறனை ஊக்குவித்து வளர்க்கவும், சமூகப்பணி ஆய்வாளர்களுக்கு ஆய்வுத் தொழில்நுட்ப உதவி வழங்கவும், ஆய்வு முறைகளில் பயிற்சியளிக்கவும், ஆய்வாளர்களுக்கு வேண்டிய தொடர்புகளை உருவாக்கிக் கொடுக்கவும், ஆய்வாளர்களுக்குத் தேவைப்படும் தரவுகளைச் சேகரித்து உருவாக்கவும், 1993 இல் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரமான அமைப்பு. இந்த அமைப்பு சமூகப்பணி தொடர்புடைய தேசிய சமூகப் பணியாளர் சம்மேளனம் (National Association of Social Workers (NASW), சமூகப்பணி கல்விக்கான அமைப்பு (Council on Social Work Education (CSWE), சமூகப்பணியில் இளங்கலை பயிற்றுவிக்கும் துறைத் தலைவர்களின் கூட்டமைப்பு (Association of Baccalaureate Social Work Program Directors (BPD), சமூகப்பணியில் முனைவர் பட்ட மேம்பாட்டிற்கான நிறுவனம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் இணைந்து கூட்டாகத் தோற்றுவித்த நிறுவனம்.
English
An independent social work organization to promote the profession's research capacity and provide technical assistance to social work researchers, provide research training, establish linking and networking opportunities for researchers, and develop a researcher database. IASWR was organized in 1993 through the efforts of several social work organizations, including the National Association of Social Workers (NASW), the Council on Social Work Education (CS WE), the Association of Baccalaureate Social Work Program Directors (BPD), and the Group for the Advancement of Doctoral Education in Social Work (GADE).