institution
நிறுவனம், ஏற்படுத்துதல், நிறுவுதல், நிலையம், சங்கம், பொது நோக்கத்துக்கான அமைப்பு, நிலையான ஏற்பாடு, நிலையான ஒழுங்கமைப்பு முறை, அறிவு கற்பிக்கும் ஏற்பாடு, சட்ட அமைப்பு, பழக்க வழக்க மரபு
தமிழ் விளக்கம்
நிறுவனம் என்பது ஒரு சமூகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்களின் நடத்தையை நெறிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட, நிலைத்த தன்மையுள்ள கட்டமைப்புகளையோ அல்லது இயங்கு விதிமுறைகளையோ குறிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்களைக் கொண்ட கூட்டு வாழ்வில் (சமுதாயம்), தனி நபர்களைக் கடந்த, அவர்களின் அபிலாட்சைகளைக் கடந்த, கூட்டு வாழ்வின் நடத்தைகளை நெறிப்படுத்தும், சமரசப்படுத்தும், சிறப்பாக்கும் சமூக நோக்கையே நிறுவனம் என்று சொல்லலாம். அது ஒரு கலாச்சாரத்தின் அடிப்படைப் பழக்க வழக்க மரபு. எடுத்துக்காட்டாக வயது வந்த ஆணும் பெண்ணும் திருமண உறவு கொள்வது (marriage), துன்பப்படுகின்ற சகமனிதருக்கு உதவும் பண்பு (welfare), தனக்கு மேலான ஒரு சக்தியை சரணடைதல் (religion) அல்லது நடத்தை ஒழுங்கமைப்பு முறை (justice அடுத்தவருக்குத் தீங்கிழைக்காதிருப்பது, நியாயமாக நடந்துகொள்வது) போன்ற செயல்முறைகளை (இயங்கு விதிமுறைகள்) நிறுவனம் எனலாம். நிறுவனம் என்பது ஒரே நேரத்தில் கட்டமைப்பாகவும் (structure), இயங்கு விதி (mechanism) முறைகளாகவும் பொருள் கொள்ளப்படுவதால், அது எல்லா சமூக அறிவியல் துறைகளின் - சமூகவியல், பொருளியல், மானுடவியல், அரசியல், சட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூகவியல் என்பது நிறுவனங்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், அதன் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிய அறிவியல் என்று டர்காம் (Durkheim) சொன்னது இங்கு நினைவு கூறத்தக்கது. உ.ம்
அரசு பரந்த பொருளில் ஒரு நிறுவமென்றால் இந்தியப் பாராளுமன்றம் குறிப்பிட்ட அர்த்தத்தில் ஒரு நிறுவனம் ஆகும். கல்வி பரந்த பொருளில் ஒரு நிறுவமென்றால் ஒரு பல்கலைக்கழகம் குறிப்பிட்ட அர்த்தத்தில் ஒரு நிறுவனம் ஆகும். சட்டம் பரந்த பொருளில் ஒரு நிறுவமென்றால் நீதிமன்றம் குறிப்பிட்ட அர்த்தத்தில் ஒரு நிறுவனம் ஆகும். திருமணம் பரந்த பொருளில் ஒரு நிறுவமென்றால் குடும்பம் குறிப்பிட்ட அர்த்தத்தில் ஒரு நிறுவனம் ஆகும். வணிகம் பரந்த பொருளில் ஒரு நிறுவமென்றால் ஒரு கடை குறிப்பிட்ட அர்த்தத்தில் ஒரு நிறுவனம் ஆகும். மதம் பரந்த பொருளில் ஒரு நிறுவமென்றால் ஒரு கோவில் குறிப்பிட்ட அர்த்தத்தில் ஒரு நிறுவனம் ஆகும்

English
1. A fundamental custom or behavior pattern of a culture, such as marriage, justice, welfare, and religion. 2. An organization established for some public purpose and the physical facility in which its work occurs, such as a prison. See also social institution.