institutional ethics committees (IECs)
நெறிமுறைசார் சிக்கல்களைப் பரிசீலிக்க நியமிக்கப்படும் குழு
தமிழ் விளக்கம்
நெறிப்படுத்தும் குழுக்கள் என்பது, சேவைத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள், தங்கள் தொழிலின் நெறிமுறை சார்ந்த விசயங்களைப் பற்றி கலந்தாலோசிக்க ஏற்படுத்தும் உறுப்பினர்கள் குழு.. மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், இந்த முறை, நிறுவன நெறிமுறைக் குழுக்கள் (Institutional ethics committees (IECs) என்றும், நிறுவனப் பணி பரிசீலனைக் குழுக்கள் (Institutional review boards (IRBs) போன்ற பெயர்களில் இயங்குகின்றன. இந்தக் குழுவினர் பணியின் போது பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் பற்றி பணியாளர்களிடத்திலும், வாடிக்கையாளர்களிடத்திலும் எடுத்துரைப்பர். ஒரு வாடிக்கையாளரின் பிரச்சனை பற்றிக் கலந்துரையாடியும், அதில் உருவாகும் நெறிமுறைச் சிக்கல்கள் பற்றியும் விவாதிப்பர். நெறிமுறைக் குழுக்கள் நிறுவனத்திற்குள்ளிருக்கும் ஒருதுறை அல்லது பல்துறை பணியாளர்களைக் கொண்டோ, வாடிக்கையாளர்கள், சமுதாயத் தலைவர்கள், வழக்கறிஞர்கள் அல்லது சுயேட்சையாகத் தொழில் புரியும் நிபுணர்களைக் கொண்ட கூட்டுக் குழுவாகவோ அமைக்கப்படலாம்.
English
See ethics committees.