Insurance Trust, NASW
தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனத்தின் தொழில்முறை காப்பீட்டுத் திட்டம்
தமிழ் விளக்கம்
சமூகப்பணியென்பது பிறரின் நன்மையை விழைகின்ற, மரியாதைக்குரிய தொழில் என்றாலும், தாங்கள் எதிர்பார்த்த பயன்கள் / விளைவுகள் சமூகப்பணியாளரின் தொடர்பினால் / சேவையினால் கிடைக்கவில்லை என்று அதிருப்தியுறும் வாடிக்கையாளர்கள், தங்களின் அதிருப்தியை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்துவர். சில வாடிக்கையாளர்கள் சமூகப் பணியாளரின் தொழில் திறமையின்மையையோ, சமூகப்பணியாளர் தவறாக வழிகாட்டியதால் தன்னுடைய பிரச்சனைகள் மேலும் அதிகமாகியதாகவோ, சமூகப்பணியாளரால் தான் ஏமாற்றப்பட்டதாகவோ வழக்குத் தொடுக்கலாம். இந்த வழக்குகள் உண்மையானதாகவோ அல்லது புரியாமையின் விளைவாகக் கூட இருக்கலாம். சமூகப்பணியாளர்கள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் போதோ அல்லது சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் போதோ, சமூகப்பணியாளர் பலவித சிரமங்களுக்கு உள்ளாவார். இந்தச் சிரமங்களை எதிர்கொள்ள தொழில் முறை பாதுகாப்பு தேவைப்படும். இந்தப் பாதுகாப்பைத் தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம், தனது உறுப்பினர்களுக்குத் தொழில்முறை காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்குகிறது. இந்தக் காப்புறுதித் திட்டத்தில் சந்தாதாரராகும் சமூகப்பணியாளரின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்த்து வாதிடவும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இழப்பீடு தர வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த இழப்பீடை வழங்கவும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் வழிவகை செய்வதால் சமூகப்பணியாளர் சில இழப்புகளிலிருந்து மீள முடியும்.
English
The principal provider of malpractice and professional liability insurance for social workers. Although the program is sponsored by the National Association of Social Workers (NASW) and managed by a private insurance company, all licensed, qualified social workers may be enrolled for a moderate annual fee. The Insurance Trust issues periodic reports about the increasing number of liability claims that are made against social work practitioners.