insurgency
கிளர்ச்சி, எதிரெழுச்சி, ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுதல், சட்டப்படியான ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்து எழுதல், கலகஞ்செய்தல், புரளி கிளப்புதல்
தமிழ் விளக்கம்
கிளர்ச்சி, ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுதல், போராட்டம் அல்லது கலகம் என்பது கட்டளைக்கெதிரான கீழ்படிவின்மை அல்லது புறக்கணிப்பாகும். ஆகவே, இது அரசாங்கம் அல்லது அரச தலைமை அதிகாரத்தினை அழிக்கும் அல்லது மாற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். இது ஒருவிதத்தில் சட்ட மறுப்பு, மக்கள் கீழ்ப்படியாமை, வன்முறையற்ற எதிர்ப்பு ஆகிய நிகழ்வுகளாக வன்முறையற்ற நடத்தைகளின் வடிவமாகக் காணப்படும். கிளர்ச்சியாளர்கள் அதிகாரத்திற்கெதிராகப் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம், நாசவேலை மற்றும் சகல உத்திகளையும் கையாள்வர். கிளர்ச்சியாளர்கள் தங்கள் செயல் நியாயமென்று கருத, அதிகார வர்க்கமோ அதை முறைகேடானதாக, சட்ட விரோதமாகக் கருதும். சில சந்தர்ப்பங்களில் இதில் வன்முறை தலைதூக்கும். கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள், குறிப்பாக அவர்கள் ஆயுதம் தரித்திருந்தால் 'கிளர்ச்சியாளர்' அல்லது 'போராட்டக்காரர்' அல்லது 'கலகக்காரர்' என அழைக்கப்படுவர்.
English
A nonbelligerent social action that attempts to depose and replace an existing government. The insurgents use political tactics, including propaganda, demonstration, strike, and sabotage, to seek legitimacy for some aspect of the political system that the ruling authority considers illegitimate.