intake

உள்ளெடுத்தல், கொள்ளப்படுதல், வாடிக்கையாளராக உள்ளெடுத்தல், வாடிக்கையாளராக ஏற்றுக்கொள்ளல்

தமிழ் விளக்கம்

உள்ளெடுத்தல் என்பது சமூகப்பணி நிறுவனத்தின் / சமூகப்பணியாளரின் சேவையை நாடிவரும் வாடிக்கையாளருடன் உரையாடி, பரஸ்பர எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்ள செய்யப்படும் செயல்முறைகளின் தொகுப்பு. வாடிக்கையாளரின் பிரச்சனையைப் புரிந்துகொண்டு, அப்பிரச்சனையைத் தீர்க்க, சமூகப்பணி நிறுவனத்தில் உள்ள வசதி வாய்ப்புகள் என்ன, அதைப் பெறுவதற்கான விதிமுறைகள் (கட்டணம், கால அவகாசம், தீர்வு முறைகள்) பற்றி விளக்கி, அதற்கு வாடிக்கையாளர் உடன்படும் பட்சத்தில் அவருடன் புரிந்துணர்வு ஏற்படுத்திக்கொண்டு, வாடிக்கையாளரின் பிரச்சனையைக் கையாளத்தக்க மனித வளத்தையும் (alloting professional helpers) பிற வசதிகளையும் ஒதுக்கீடு செய்வதில் முடியும்.

English

Procedures used by social agencies to make the initial contacts with the client productive and helpful. Generally, these procedures include informing the client about the services the agency offers; providing information about the conditions of service, such as fees and appointment times; obtaining pertinent data about the client; interviewing to get a preliminary impression of the nature of the problem; arriving at an agreement with the client about willingness to be served by the agency; and assigning the client to the social worker or social workers who are best suited to provide the needed services.