Integrated Child Services Development Scheme of India

இந்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம்

தமிழ் விளக்கம்

குழந்தைகளின் மீதான இந்திய சமூகத்தின், இந்திய அரசின் கடப்பாட்டை வெளிப்படுத்தும் திட்டம். ஆரோக்கியமான பள்ளி முன்பருவக்கல்வி வாய்ப்பளிக்கவும், ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்படும் நச்சு விளைவுகளை அகற்றவும், குழந்தைகளை நோய்களிலிருந்து காப்பாற்றவும், குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிக்கவும், குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் திறனை வளர்க்கவும், குழந்தை நலனோடு தொடர்புடைய அனைத்து அரசுத் துறைகளை ஒருங்கிணைத்துப் பணிபுரியவும், 1975 ஆண்டு தொடங்கப்பட்டு, இன்று குழந்தைகளுக்கான உலகின் மிகப் பெரிய திட்டமாக பரிணமித்துள்ளது, குழந்தைகளுக்கான துணை உணவு (supplementary nutrition), நோய்த்தடுப்பு முறைகள் (immunization), மருத்துவப் பரிசோதனை (health check-up), பரிந்துரை சேவைகள் (referral services), குழந்தை முன்பருவக்கல்வி, (pre-school non-formal education), தாய்மார்களுக்கு சத்துணவு மற்றும் ஆரோக்கியக் கல்வி (nutrition & health education). என்று பல சேவைகள் இத்திட்டத்தின் மூலமாகச் செயல்படுத்தப்படுகின்றன. இந்தச் சேவைகளை அளிக்க ஒவ்வொரு குடியிருப்பிலும் குழந்தைகள் காப்பகம் (Balwadi) அமைக்கப்பட்டு, அங்கே குழந்தை நலப் பணியாளர்கள் (அங்கன்வாடிப் பணியாளர்) பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

English

The social welfare program established in 1970 that provides nutritional, health care, educational, and social services to needy children in India. Social workers administer these programs at the community level using volunteers, with added support from health care professionals.