integrated method
பன்முகத் தன்மைகொண்ட முறை, ஒரு பிரச்சனையை பல்வேறு கோணங்களிலிருந்து மதிப்பீடு செய்து தீர்வு சொல்லும் முறை
தமிழ் விளக்கம்
தங்களுடைய சேவைகளை நாடிவரும் வாடிக்கையாளருக்கு, குடும்பங்களுக்கு, குழுக்களுக்கு, சமுதாயத்திற்கு தங்களின் பல்துறை ஞானத்தை, பல்திறனை, பன்முக உத்திகளை ஒருங்கிணைத்துச் சேவை புரிதல். பல முறைகளை, உதாரணமாக தனியாளர் பணி, குழுப்பணி, சமுதாய அமைப்பாக்கல் போன்ற முறைகளை சமய சந்தர்ப்பதிற்கேற்பக் கையாண்டு சேவை புரியும் சமூகப்பணியாளரைவிட, பலமுறைகளை ஒன்றாக ஒருங்கிணைத்துச் சேவை செய்வது இன்னும் சிறப்புடையது, மேலானது என்று கருதப்படுகிறது.
English
Social work practice that involves a high degree of professional knowledge and skill in bringing together the concepts and techniques used in serving individuals, families, groups, and communities. The social worker, using the integrated method, is considered to be more than a generalist, or one who simply combines knowledge and skills of some basic casework, group work, and community organization. See also knowledge base.