integrity versus despair
இணக்கமும் விரக்தியும் (இணக்கமின்ன்மையும்), அக உறுதிப்பாடு. Vs நம்பிக்கையிழப்பு (Ego Integrity vs. Despair
தமிழ் விளக்கம்
எரிக் எரிக்சன் என்ற உளவியலாளர் எடுத்துரைத்த எட்டு உளசமூக அபிவிருத்தி நிலைகளில் எட்டாம் நிலை தான் இணக்கமும் விரக்தியும் (இணக்கமின்ன்மையும்) அல்லது அக உறுதிப்பாடு. Vs நம்பிக்கையிழப்பு (Ego Integrity vs. Despair). இது பின்முதிர் பருவத்தில் 55 வயதிலிருந்து ஒருவரின் மரணம் வரை தொடரும் நிலையாகும். இந்த நிலையில் மற்ற மனிதர்களோடு ஆழமான இணக்கம் / ஒருங்கிணைப்பு ஏற்பட்டு அந்த ஒருங்கிணைப்பினால், ஒருவர் தன் வாழ்வின் அர்த்ததை உணரலாம் அல்லது எதனோடும் இணக்கமற்ற தன்மை உண்டாகி, மரணம் நெருங்க நெருங்க அதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கான பொருள் தெரியாத விரக்தி நிலை ஏற்படலாம்.
English
The last of the eight stages in human psychosocial development, according to the psychosocial development theory of Erik Erikson (1902-1994), occurring from about age 54 to death. The individual may develop a sense of integration with humanity and of the unique meaning of his or her own life, or there may be a sense of regret about how that life has been lived and a fear of death.