intellectualization
அறிவுக்குகந்ததாக்குதல்
தமிழ் விளக்கம்
ஒன்றை அறிவுக்குகந்ததாக்குதல் என்பது வரவேற்கப்படவேண்டிய செயல் என்றாலும், அதை எதார்த்தத்திலிருந்து தப்பிக்க பயன்படுத்தும் போது அது உளப்பாதுகாப்பு (defense mechanism) முறையாகி விடுகிறது. ஒரு பிரச்சனை ஆழ்மனதில் உருவாக்கும் தவிப்பை, அதனால் உண்டாகும் உணர்ச்சிக் கொந்தளிப்பைப் புறக்கணித்து, அந்தப் பிரச்சனையை அறிவுபூர்வமாக அலசி ஆராய முற்படுவதென்பது, பிரச்சனையினால் உருவான உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்து தப்பிக்கும் வழிமுறையே அன்றி பிரச்சனையைத் தீர்க்கும் வழிமுறையல்ல. இதைப் பகுத்தறியும் முறை என்று சொல்வதைவிட, போலியான பகுத்தறிவு அல்லது ஒரு செயலுக்குப் போலியாக நியாயம் கற்பித்தல் எனலாம்.
English
A defense mechanism and personality tendency in which the individual ignores feelings and emotions and analyzes problems or conflicts as objectively as possible but usually in a stylized or overly rational manner.