intelligence

நுண்மதி, ஞானம், நுண்ணறிவு, தெள்ளிமை, மதி நுட்பம், அறிவுடைமை, அறிவுத்திறம், கூர்மதி, விவேகம், தகவல், வேவுத்தகவல்

தமிழ் விளக்கம்

நுண்ணறிவு (Intelligence) என்பது, திட்டமிடுதல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், சிந்தித்தல் (எண்ணங்கள் பெறப்படும் விதம்), எண்ணக் கருக்களையும் மொழியையும் விளங்கிக்கொள்ளல், கற்றல் (அறிவை, பழக்கங்களை, செயற்திறனை புதிதாகப் பெற்றுக்கொள்ளல் அல்லது ஏற்கனவே பெற்றவற்றை மேம்படுத்திக் கொள்ளல்) போன்றவற்றுக்கான திறன்களை உள்ளடக்கிய மனம் (மனமென்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பு) சார்ந்த திறமைகளைத் தழுவி அமைந்த, மனத்தின் ஒரு இயல்பாகும். நுண்ணறிவு என்பது சில சமயங்களில், பரந்த பொருளில் நோக்கப்பட்டாலும், உளவியலாளர்கள், இதனை ஆக்கத்திறன், ஆளுமை, அறிவுநுட்பம் (wisdom), ஒருவரின் சிறப்புப் பண்புகள் என்பவற்றிலிருந்து வேறுபட்ட ஒன்றாகவே கருதுகிறார்கள்.

English

The ability to learn from experience and respond effectively to new situations, mentally store and retrieve information, solve problems, successfully manipulate the environment, and find ways of producing desired results. See also multiple intelligences, fluid intelligence, constructive intelligence, and crystallized intelligence.