intensive family preservation services (IFPS)

தீவிர குடும்பப் பரிபாலனச் சேவைகள், குடும்பப் பரிபாலனத்திற்கான முனைப்பான சேவைகள்

தமிழ் விளக்கம்

பல நேரங்களில் நெருக்கடிக்குள்ளான குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவிகள், அக்குடும்பங்களின் தேவையைப் பொருத்ததாக அமையாமல், உதவி செய்ய முற்படும் நிறுவனங்களின் தன்மையைப் பொருத்தே அமைவதால், குடும்பங்களுக்குத் தேவையான பொருத்தமான உதவிகள் கிடைப்பதில்லை. இதை நிவர்த்திக்கவே தீவிர குடும்பப் பரிபாலனச் சேவைகள் வடிவமைக்கப்பட்டது. குடும்பங்களை மையப்படுத்திய, சமுதாயம் சார்ந்த, குடும்பத்திலிருந்து குழந்தைகளைப் பிரித்து காப்பகங்களுக்கு அனுப்பாத, குழந்தைகளை வீட்டிலோ அல்லது அக்குடும்பத்திற்கு பரிச்சயமான இடத்திலோ வைத்து, குறுகிய காலத்திற்கு 24 மணிநேரமும் உதவி செய்ய, அதிக வேலைப்பளு இல்லாதபடி சமூகப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கும் திட்டம். எடுத்துக்காட்டாக சிறார் நீதிமன்றங்கள் பரிந்துரையின் பேரில் வரும் குடும்பங்களுக்கான தேவைகளும், மனநல மருத்துவமனைகளின் பரிந்துரையின் பேரில் வரும் குடும்பங்களுக்கான தேவைகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆனால் இந்த இருவகைக் குடும்பங்களையும் உள்ளெடுக்கும் (intake) நிறுவனம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் இருவேறு வகைபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வது நிறுவனத் திறனிற்கு அப்பாற்பட்டதாக அமைந்துவிடும். இது மாதிரியான சந்தர்ப்பங்களில் நெருக்கடிக்குள்ளான குடும்பங்களுக்குத் தேவைப்படும் எல்லா உதவிகளையும் முழுமையாக வழங்க, தங்களுக்கிடையே பரஸ்பரம் ஒத்துழைக்கும் சமூக சேவை நிறுவனங்களைப் பயன்படுத்தி, சமூகப்பணியாளர் குழுவின் மூலம் சேவைகளை ஒருங்கிணைத்து வழங்கப்படும் முறையைத் தீவிர குடும்பப் பரிபாலனச் சேவைகள் அல்லது குடும்பப் பரிபாலனத்திற்கான முனைப்பான சேவைகள் எனப்படுகிறது. இதன்படி ஒரு வாடிக்கையாளரை, ஒரு குடும்பத்தை எந்த நிறுவனம் உள்ளெடுத்தாலும், வாடிக்கையாளரின் தேவைகளுக்கேற்ப பல நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பொருத்தமான சேவைகள் வழங்கப்படும்.

English

A program using a multisystems orientation to provide a holistic range of social services to families in crisis, usually through the involvement of social work teams and social agencies involved in interorganizational collaboration. Many social work intervention systems are determined less by the family's need than by the type of agency that has initial contact with the family. For example, when a multiproblem family enters the helping network through the juvenile court system, the intervention plan is likely to be different than if the family enters through the child welfare or mental health clinic routes. In the IFPS system, the same services are provided regardless of where the family enters. Several agencies are organized to collaborate when a family enters any one of their systems and meets the appropriate criteria. The family is assigned to a social work team of workers from each agency.