Inter-University European Institute on Social Welfare

சமூக நல்னுக்கான ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் நிறுவனம்

தமிழ் விளக்கம்

ஐரோப்பிய நாடுகளில் அமல்படுத்தப்படும் சமூகநலத் திட்டங்கள் குறித்த தகவல்களைத் தொகுப்பதையும், அதைப் பகிர்ந்து கொள்வதையும், அதைப்பற்றிய ஆய்வு மற்றும் கல்விப்பயிற்சி அளிப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு, பெல்ஜியம் நாட்டின் மார்சிநேல் நகரத்தைத் (Marcinelle, Belgium) தலைமையிடமாகக் கொண்டு, 1970 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். இது ஐரோப்பிய நாடுகளின் பல்கலைக் கழகங்களை உறுப்பினர்களாகக் கொண்டு, ஐரோப்பிய நாடுகளின் சமூக நலத் திட்டங்களில் ஒருபடித்தான தன்மையைக் கொண்டுவர முயல்கிறது.

English

A research and educational organization oriented to acquiring, developing, and disseminating information about European social welfare. The multidisciplinary organization, founded in 1970 and headquartered in Marcinelle, Belgium, comprises members from universities in most European nations and seeks a uniform European social welfare policy.