interactional model
செயலெதிர்ச் செயல் / தொடர்பாடல் / இடைவினை / ஊடாட்டம் / இடைத்தொடர்பு / பரஸ்பரத் தொடர்பு மாதிரியம்
தமிழ் விளக்கம்
மனிதர்களுக்கிடையே ஏற்படும் பரஸ்பரத் தொடர்பாடல் ஒருவரின் நடத்தை, சிந்தனை மற்றும் செயல்மீது செல்வாக்கு செலுத்தி சமூக உறவுகளைக் கட்டமைக்கின்றது. மனிதர்களின் மகிழ்ச்சியும், மகிழ்ச்சியின்மையும் இந்தத் தொடர்பாடல்களின் தன்மையினால் ஏற்படுவதாகும். இந்த தொடர்பாடல்களைத் திட்டமிட்டு பயன்படுத்தினால் ஆளுமை வளர்ச்சிக்கும், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற கருத்திலிருந்து பிறந்ததே தொடர்பாடல் மாதிரியம். எடுத்துக்காட்டாக குடும்பப் பிரச்சனைகள் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்படுத்தும் தெளிவற்ற, சந்தேகத்திற்கிடமான நடத்தைகளாலும், பேச்சாலும் உருவாகிறது என்பது தொடர்பாடல் மாதிரியத்தின் அனுமானம். ஆகையால் குடும்பங்களுக்குச் சிகிச்சை என்பது குடும்ப உறுப்பினர்களின் தொடர்பாடலை ஒழுங்குபடுத்துவதுதான். தொடர்பாடலின் முக்கியத்துவத்தை சமூகப்பணியின் சிகிச்சை முறைகளில் கையாண்டவர்கள் வில்லியம் ஸ்வார்ட்ஸ் மற்றும் லாரன்ஸ் சுல்மான் (William Schwartz and Lawrence Shulman) போன்றவர்கள்.
வாடிக்கையாளர், வாடிக்கையாளரின் குடும்பம், சமூகப்பணியாளர், சமூகப்பணி நிறுவனம், வாடிக்கையாளரின் பணியிட சகாக்கள் என்று பலரும் இவர்கள் கையாண்ட சிகிச்சை முறைகளில் பங்கேற்பாளர்களாக ஆக்கப்பட்டனர். இந்த முறையில் வாடிக்கையாளர் மீது சமூகப்பணியாளர் காட்டும் அக்கறையே, வாடிக்கையாளரின் தொடர்பாடல்களில் செல்வாக்கு செலுத்தி நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது
வாடிக்கையாளர், வாடிக்கையாளரின் குடும்பம், சமூகப்பணியாளர், சமூகப்பணி நிறுவனம், வாடிக்கையாளரின் பணியிட சகாக்கள் என்று பலரும் இவர்கள் கையாண்ட சிகிச்சை முறைகளில் பங்கேற்பாளர்களாக ஆக்கப்பட்டனர். இந்த முறையில் வாடிக்கையாளர் மீது சமூகப்பணியாளர் காட்டும் அக்கறையே, வாடிக்கையாளரின் தொடர்பாடல்களில் செல்வாக்கு செலுத்தி நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது
English
A holistic orientation to social group work and other forms of social work practice developed by William Schwartz and Lawrence Shulman (Social Work, 38[January 1993], pp. 9197) that emphasizes the reciprocal influences of each person and system involved in the helping process, including the worker, the client, the worker's supervisor and agency, the client's family, and relevant others as they are all engaged or acknowledged as participants in the service provided. The skill of the worker leads to the client's perception of the worker as a caring professional, which positively affects the relationship and the outcome of practice.